விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் விருதுநகர் மாவட்ட காவல் துறையும், வேர்ல்டு விஷன் இந்தியாவும் இணைந்து குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுப்பது சம்பந்தமான விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தினர். இதில் விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணோகர் I.P.S அவர்கள் தலைமை ஏற்று சிறப்புரையாற்றினார்.
விருதுநகர் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.S.மாரிராஜன் அவர்கள் மற்றும் மாவட்ட குற்ற பதிவேட்டுக் கூடம் துணை காவல் கண்காணிப்பாளர் திரு.S.வினோத் அவர்களும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்று சிறப்புரையாற்றினர். இதைத்தொடர்ந்து குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுப்பது குறித்த கையெழுத்து இயக்கம் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் குறித்த வாகன விழிப்புணர்வு பிரச்சாரத்தையும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் துவக்கி வைத்தார்.

