கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் கணேசபுரத்தில் காவலர்கள்குடியிருப்பு உள்ளது. இங்கு சிறுவர்கள் விளையாடி பொழுது போக்குவதற்கு வசதிகள் இல்லை. இந் நிலையில் இதை அறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாரயணன் ஐ.பி.எஸ் முயற்சியில் அந்த குடியிருப்பில் காலியாக கிடந்த பகுதிகள் சரி செய்யப்பட்டு அழகிய சிறுவர் பூங்கா உருவாக்கபட்டது. அதனை இன்று திறந்து வைத்து சிறப்பித்தார். மேலும் அங்கு உள்ள சிறுவர்களின் குறைகளை கேட்டறிந்தார். காவலர் குடியிருப்பில் உள்ள அனைத்து சிறுவர், சிறுமியரும் விளையாடி தங்கள் மகிழ்ச்சியை தெரிவித்தனர்.

