தருமபுரி மாவட்டம் தொப்பூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியான சேலம்செல்லும் வழியான இரட்டைப்பாலம் தேசியநெடுஞ்சாலையில் லாரியில்மோதி எடப்பாடியை சேர்ந்த ஈஸ்வரன் (38), சாமிநாதன்(33), செல்வராஜ் (37) ஆகிய மூன்று நபர்கள் உயிரிழந்தனர். தகவலறிந்து சேலம் சரக டி.ஐ.ஜி மகேஸ்வரி ஐ.பி.எஸ்., மற்றும் தருமபுரி மாவட்ட காவல்கண்காணிப்பாளர் கலைச்செல்வன் ஐ.பி.எஸ் ஆகியோர் விபத்து ஏற்பட்ட பகுதியை நேரில் சென்று ஆய்வு செய்து தொப்பூர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவுசெய்யப்பட்டுவிசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

