தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பாக ஊரடங்கை முன்னிட்டு குளத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கீழவைப்பார் புனித லூயிஸ் உயர்நிலைப் பள்ளி வளாகத்தில் வைத்து சுற்றுவட்டாரப் பகுதியில் வசித்து வரும் தூய்மை பணியாளர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் ஏழை எளிய மக்கள் என 120 பேருக்கு அரிசிப்பையை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் இன்று (16.06.2021) வழங்கினார்.
அப்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பேசுகையில் 18 வயதிற்கு மேற்பட்ட பொதுமக்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசி கட்டாயம் போட்டுக்கொள்ள வேண்டும். அதே போன்று மூக்கை நன்றாக மூடி முகக்கவசம் அணிய வேண்டும், அதிலும் 2 முகக்கவசம் அணிவது மிகவும் நல்லது. அடிக்கடி கைகளை சோப்பு மற்றும் கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்றும், கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்கு அரசு அறிவித்துள்ள நெறிமுறைகளை கடைபிடித்து முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்று விழிப்புணர்வு உரையாற்றினார்.
இதற்கான ஏற்பாடுகளை விளாத்திகுளம் காவல் துணை கண்காணிப்பாளர் திரு. பிரகாஷ் உத்தரவின்பேரில், குளத்தூர் காவல் நிலைய போலீசார் செய்திருந்தனர்.*
♻ *இந்நிகழ்ச்சியில் குளத்தூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர்கள் திரு. கங்கைநாத பாண்டியன், திரு. சுப்பையா உட்பட காவல்துறையினர் மற்றும் கீழவைப்பார் மோட்ச அலங்கார அன்னை ஆலய பங்குத் தந்தை அந்தோணி ஜெகதீஷ், கீழ வைப்பார் கிராம தலைவர் திரு. மனோகரன் ஆகியோர் உடனிருந்தனர்.


