பத்திரிகையாளர்களுக்கு அடையாள அட்டை வழங்குவதற்கு ஐந்து நபர்கள் அடங்கிய குழுவை அமைத்து ஆணை பிறப்பித்தார். தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர். இது தூத்துக்குடி பத்திரிக்கையாளர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. அதே நேரத்தில் இந்த குழு அமைப்பது குறித்து துரித நடவடிக்கை எடுத்த தூத்துக்குடி மாவட்ட ஆட்சியருக்கு பத்திரிகையாளர்கள் சார்பில் நன்றிகள் தெரிவிக்கப்பட்டது
தூத்துக்குடி மாவட்டத்தில் தொலைக்காட்சி தினசரி, பருவ இதழ்களில் பணிபுரியும் பத்திரிகையாளர்களுக்கு இந்த ஆண்டுக்கான 2021 அரசு பிரஸ் அடையாள அட்டை வழங்க வேண்டி தொடர்ந்து பத்திரிக்கையாளர்கள் வலியுறுத்தியதின் விளைவாக
தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் செந்தில்ராஜ் மற்றும் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சீனிவாசன் ஆகியோர் முயற்சியில் 5 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சி தலைவர் செந்தில்ராஜ் தலைவராகவும்
உறுப்பினராக, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சீனிவாசன் மற்றும் ஒரு அரசு அதிகாரி உள்ளிட்ட மூன்று நபர்கள் அரசு சார்பாகவும் அதே சமயத்தில் பத்திரிக்கையாளர்கள் சார்பில் இரண்டு நபர்களை நியமிக்கப்பட்டுள்ளார்கள் ஆகமொத்தம் குழுவில் 5 பேர் நியமிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்த குழுவில் இடம்பெற்றுள்ள பத்திரிக்கையாளர் அரசு அங்கீகார அடையாள அட்டை பெற்ற சீனியர் நிருபர்கள் ஆவார்கள். 30 ஆண்டுகளுக்கு மேல் தொடர்ந்து பத்திரிகை
துறையில் பணியாற்றி வருவதுடன் தமிழ்நாடு அரசின் சார்பில் தலைமைச் செயலகம் வாயிலாக 20 ஆண்டுகளாக அரசு அங்கீகார அடையாள அட்டை பெற்று வந்த மூத்த பத்திரிகையாளர் அருண் இந்த குழுவில் நியமித்துள்ளார் மாவட்ட ஆட்சியர். அதுபோல் அரசின் அதிகாரப்பூர்வ சேனலாக விளங்கும் தூர்தர்ஷன் செய்தியாளர் லட்சுமணன் இவரும் தமிழக அரசின் அங்கீகார அடையாள அட்டை பெற்றவர். இவரையும் இந்த குழுவில் உறுப்பினராக ஆட்சியர் நியமித்துள்ளார். அங்கீகார அடையாள அட்டை வைத்திருக்கும் பத்திரிகையாளர்களை குழுவில் நியமிப்பதே நடைமுறையில் இருந்து வருகிறது.
அந்த அடிப்படையில் தூத்துக்குடியில் கமிட்டி அமைத்து உத்தரவிட்டுள்ளார் மாவட்ட ஆட்சியர்.
பல வருடங்களுக்குப் பிறகு பத்திரிக்கையாளர்கள் வேண்டுகோளின்படி கமிட்டி அமைத்து நடவடிக்கை எடுத்த தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்குமார் மற்றும் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சீனிவாசன் ஆகியோரை தூத்துக்குடி பத்திரிக்கையாளர்கள் மனதாரப் பாராட்டினார்கள் பத்திரிக்கையாளர்களின் உரிமைகள் மற்றும் அவர்களுக்கு கிடைக்க வேண்டிய அங்கீகாரத்தை குழு உறுப்பினர்களான பத்திரிக்கை குடும்பத்தைச் சார்ந்த மூத்தப் பத்திரிகையாளர்கள் அருண் மற்றும் லட்சுமணன் ஆகியோர் மாவட்ட ஆட்சியரிடம் பத்திரிக்கையாளர்களின் கோரிக்கைகளை எடுத்துக்கூறி பல நல்ல திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என பத்திரிக்கையாளர் என்ற முறையில் கேட்டுக்கொள்கிறோம் என்றனர். குழு அமைத்த மாவட்ட ஆட்சியருக்கு தூத்துக்குடி பத்திரிக்கையாளர் பலரும் பாராட்டுக்களை தெரிவித்தனர்.
![]()

தமிழ்நாடு முதல்வர் மு.க ஸ்டாலின் பத்திரிகையாளர்களை முன்கள பணியாளர்களாக அறிவித்துள்ளார். மேலும் கொரோனா தொற்று மூலம் இறந்த பத்திரிகையாளர்களின் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் அறிவித்துள்ளார். கொரோனா நிவாரண நிதியாக ரூ.5000 வழங்கப்பட்டு வருகிறது.
மேலும், தலைமை செயலகத்தில் வழங்கப்படும் பத்திரிகையாளர்களுக்கான அரசு அங்கீகார அடையாள அட்டை இனிமேல் மாவட்டம் தோறும் பணியாற்றும் மாவட்ட செய்தியாளர்களுக்கு, அந்தந்த மாவட்ட கமிட்டி குழு மூலம் பரிந்துரை செய்யப்பட்டு அரசு அங்கீகார அடையாள அட்டை வழங்க உள்ளனர்.
அதற்க்கு முன்னோட்டமாக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் தமிழ்நாடு செய்தித்துறை அமைச்சர் வெள்ளக்கோவில் சாமிநாதன் ஆகியோரின் ஆணைக்கிணங்க, தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் உடனடியாக பத்திரிகையாளர்கள் நலன் காக்கும் வகையில் அரசு அங்கீகார கமிட்டி குழு நிமித்தார். இந்த குழு அமைத்ததில் அரசு விதிமுறைகளை முறையாக பின்பற்றி தமிழக அரசின் அங்கீகார அடையாள அட்டை பெற்ற மூத்த பத்திரிகையாளர்களை இந்த குழுவில் மாவட்ட ஆட்சியர் நியமித்துள்ளார்.
தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களுக்கு முன்னுதாரணமாக, முதல்வர் மற்றும் செய்தித்துறை அமைச்சரின் உத்தரவை அமுல்படுத்திய தூத்துக்குடி ஆட்சியர் செந்தில்குமார் அவர்களுக்கு, தூத்துக்குடி மாவட்ட பத்திரிகையாளர்கள் பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். அதுபோல் தமிழக முதல்வருக்கும், செய்தித்துறை அமைச்சருக்கும் தூத்துக்குடி பத்திரிகையாளர்கள் வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.
செய்தி தொகுப்பு: சக்திவேல்

