கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு பெற்றோரை இழந்த ஆதரவற்ற குழந்தைகளின் பெயரில் வைப்புத் தொகை வைக்கும் திட்டத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.
கரோனா நோய்த் தொற்றால் பெற்றோா், தாய் அல்லது தந்தையை இழந்த குழந்தைகளுக்கு நிதியை வைப்பீடு செய்து பட்டப் படிப்பு வரை கல்விச் செலவும் ஏற்கப்படும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தாா். இந்தத் திட்டத்துக்கான அரசின் வழிகாட்டு நெறிமுறைகளும் அண்மையில் வெளியிடப்பட்டு இருந்தன.
இத்திட்டத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். அதன்படி, தமிழகத்தில் கரோனா நோய்த் தொற்றால் பெற்றோா், தாய் அல்லது தந்தையை இழந்த 2,729 குழந்தைகளுக்கு வைப்புத் தொகை மற்றும் கல்வி உதவிக்கான சான்றுகளையும் வழங்கினார்.
சமூக ஊடகங்களுக்கான புதிய விதிமுறைகளை கூகுள், ஃபேஸ்புக் (முகநூல்) உள்ளிட்ட பெரும்பாலான சமூக ஊடகங்கள் ஏற்றுக் கொண்டுள்ளன. அதன்படி, குறைதீா்க்கும் அலுவலா்களை நியமிக்கவும் தொடங்கியுள்ளன. இந்த விவரங்களை அந்த ஊடகங்கள் தங்களது வலைதளப் பக்கத்தில் வெளியிட்டன.

