• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

வீடு மற்றும் காரை சேதப்படுத்தி, அரிவாளால் தாக்கி கொலை முயற்சி – 4 பேர் கைது

policeseithitv by policeseithitv
June 16, 2021
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
வீடு மற்றும் காரை சேதப்படுத்தி, அரிவாளால் தாக்கி கொலை முயற்சி – 4 பேர் கைது
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தூத்துக்குடி மாவட்டம், முறப்பநாடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வீடு மற்றும் காரை சேதப்படுத்தி, அரிவாளால் தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்ட 4 எதிரிகள் கைது – மாவட்ட காவல் கண்காணிப்பாளர் . எஸ். ஜெயக்குமார் நேரில் சென்று சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை.

முறப்பநாடு ஆழிகுடி பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் முருகையா மகன் சுடலைமுத்து (45). இவர் கருங்குளம் யூனியனில் 10வது வார்டு அதிமுக கவுன்சிலராக உள்ளார். இவருக்கும், கருங்குளம் பஞ்சாயத்து யூனியன் சேர்மனாக உள்ள அதிமுகவைச் சேர்ந்த ராஜேந்திரன் மனைவி கோமதி தரப்பினருக்கும் முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் நேற்று (14.06.2021) மணக்கரையைச் சேர்ந்த கோமதி மற்றும் அவரது கணவரான சுப்பையா மகன் ராஜேந்திரன், ராஜேந்திரன் சகோதரர்களான அன்பு என்ற அங்கப்பன், துரை, கணேசன், அதே பகுதியைச் சேர்ந்த வெள்ளையா மகன்களான நடராஜன், முத்துராமலிங்கம், ராஜேந்திரன் மகன் செந்தூர், முத்துராமலிங்கம் மகன் சங்கர் மற்றும் முருகேசன், நம்பிராஜன் என்ற நடராஜன் மகன்கள் ராமன், சங்கர், குப்பக்குறிச்சியை சேர்ந்த குமார் என்ற தங்க பழனிக்குமார், பார்வதி மகன்கள் கணேசன் மற்றும் வேல்முருகன், துரைபாண்டி மகன் சுப்பு, மகேஷ், மந்திரம், மாரியப்பன், ராஜா, மற்றும் சிலர் சேர்ந்து சுடலைமுத்துவின் வீட்டிற்கு சென்று அவரது உறவினரான ஆழிகுடியைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் கிருஷ்ணன் (60), முருகையா மகன் சிவராமன் (37), கணபதி மகன் முண்டசாமி (30), அர்சுனன் மகன் மகாராஜன் (35) ஆகியோரை அரிவாளால் தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்டதுடன் சுடலைமுத்துவின் வீட்டிலிருந்த டிவி, மேசை, சேர், கார் மற்றும் இருசக்கர வாகனத்தை உடைத்து சேதப்படுத்தியுள்ளனர்.

இதுகுறித்து சுடலைமுத்து அளித்த புகாரின் பேரில் முறப்பநாடு காவல் நிலைய போலீசார் வழக்குபதிவு விசாரணை செய்து வந்தனர். இந்நிலையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் சம்பவ இடத்தை பார்வையிட்டு சம்மந்தப்பட்ட எதிரிகளை விரைந்து கைது செய்ய தூத்துக்குடி ஊரக காவல் துணை கண்காணிப்பாளர் பொன்னரசு உத்தரவிட்டார். மேற்படி உத்தரவின் பேரில் காவல் துணை கண்காணிப்பாளர் மேற்பார்வையில் முறப்பநாடு காவல் ஆய்வாளர் பாஸ்கரன் தலைமையில் உதவி ஆய்வாளர் தேவசகாயம் மற்றும் காவலர்கள் அடங்கிய போலீசார் மேற்படி வழக்கில் ஈடுபட்ட எதிரிகளான முத்துராமலிங்கம் மகன் முருகேசன் (32), நம்பிராஜன் என்ற நடராஜன் மகன் ராமன் (30), பார்வதி மகன் வேல்முருகன் (24) மற்றும் துரைப்பாண்டி மகன் மகேஷ் (36) ஆகிய 4 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தலைமறைவாக உள்ள மற்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

Previous Post

பழங்குடி மக்களுக்கு உணவு பொருட்களை திருவாரூர் மாவட்ட எஸ்.பி வழங்கினார்

Next Post

ஆதரவற்ற குழந்தைகளின் பெயரில் வைப்புத் தொகை வைக்கும் திட்டத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.

Next Post
ஆதரவற்ற குழந்தைகளின் பெயரில் வைப்புத் தொகை வைக்கும் திட்டத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.

ஆதரவற்ற குழந்தைகளின் பெயரில் வைப்புத் தொகை வைக்கும் திட்டத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In