மாற்றுத்திறனாளி மாணவர்கள் 100 பேருக்கு கொரோனா நிவாரண பொருட்கள் – மாவட்ட காவல்துணை கண்காணிப்பாளர் வழங்கினார் .
நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த மணக்குடி ஊராட்சியில் உள்ள வட்டார வள மைய வளாகத்தில் தலைஞாயிறு வட்டாரத்தில் உள்ள 100 மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு சமூக ஆர்வலர் ஆசிரியை வசந்தா சித்திரவேலு அரிசி, மளிகை பொருட்கள் , காய்கறிகள் , பிஸ்கட் , பால் பாக்கெட் ஆகியன கொண்ட நிவாரண தொகுப்பு வழங்கும் விழா
நடைபெற்றது. முன்னதாக கொரோனா விழிப்புணர்வு பாடல் பாடப்பட்டது. இதில் மாவட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளர் சபியுல்லா நிவாரண பொருட்களை
மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு வழங்கி கொரோனா விழிப்புணர்வு குறித்து பேசினார். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் குணசேகரன் மற்றும் செஞ்சிலுவைச் சங்க நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
செய்திதொகுப்பு
மாணிக்கவாசகம் நாகப்பட்டினம்

