போலீஸ் பொதுமக்கள் பொதுநல டிரஸ் சார்பாக சென்னை ராயபுரத்தில் உள்ள ஏழை எளிய மக்களுக்கு வடசென்னை மாவட்ட தலைவி DR.வாணி அவர்கள் நிவாரண பொருள் வழங்கினார்.
கொரோனா வைரஸ் உலகத்தையை புரட்டி போட்டுள்ள நிலையில் இந்தியா முழுவதும் 144 தடை உத்தரவு அமுலில் இருந்து வருகிறது இதனால் இயல்புநிலை முற்றிலும் பாதிக்கபட்டு உள்ளது. அன்றாடம் வேலை பார்த்துபிழைப்பு நடத்தி வரும் பல ஏழை,
எளிய மக்கள் மிகவும் வறுமையில் இருந்து வருகின்றனர்.இதனை போக்கும் வகையில் நாடு முழுவதும் தொண்டு நிறுவனம்,
அறக்கட்டளை, சமூக அமைப்புகள் பல்வேறு அரசியல் கட்சியினர், தொழில் அதிபர்கள், மனித நேயமிக்க நல்ல உள்ளங்கள் ஆகியோர் நாட்டில் அணைத்து பகுதிகளிலும் உணவு பொருள்கள், காய்கறி,
அரிசி, ஆகியவை வழங்கி வருகின்றனர். அந்த அடிப்படையில் போலீஸ் பொதுமக்கள் பொதுநல டிரஸ் சார்பாக மாநில நிறுவனத் தலைவர் டாக்டர் S.N.R அவர்களின் ஆணைக்கிணங்க வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் ராயபுரத்தில் சேர்ந்த 50 குடும்பங்களுக்கு தொடர்ச்சியாக அவர்கள் வாழ்வதற்கு தேவையான
5 கிலோ அரிசி மளிகை பொருட்கள் காய்கறி ஆகியவற்றை வடசென்னை மாவட்ட தலைவி DR.வாணி அவர்கள் வழங்கினார். கொரோனா தொற்று காரணமாக 144 தடை உத்தரவு அமுலில் உள்ள நிலையில் போலீஸ் பொதுமக்கள் பொதுநல டிரஸ் சார்பில் பொதுமக்களுக்கு பல்வேறு விழிப்புணர்வு மற்றும் காவலர்கள் பலருக்கும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் பாட்டில் ,பிஸ்கட் ,முகக்கவசம், சானிடைசர் போன்ற பாதுகாப்பு உபகரணம் தொடர்ந்து வழங்கி வந்த நிலையில் இராணிப்பேட்டை பகுதிகளில் காவலர்களுக்கு சிற்றுண்டி ஆகியவை இந்த அமைப்பு வழங்கியது அதுபோல் இந்த அமைப்பு நிர்வாகிகள் பல்வேறு மாவட்டங்களில் இது போன்ற சமூக பணிகளில் ஈடுபடவேண்டும் என போலீஸ் பொதுமக்கள் பொதுநல டிரஸ் மாநில நிறுவனத் தலைவர் டாக்டர் S.N.R அவர்களின் ஆணைக்கிணங்க சென்னை உட்பட பல மாவட்டங்களில் போலீஸ் பொதுமக்கள் பொதுநல டிரஸ் நிர்வாகிகள் ஆர்வத்துடன் சமூக பணிகளில் ஈடுபட்டனர்.
ஊரடங்கு உத்தரவு நேரத்தில் தியாக உணர்வோடு மக்களுக்காக சேவை செய்யும்
மனித நேயரும் போலீஸ் பொதுமக்கள் பொதுநல டிரஸ் மாநில நிறுவனத் தலைவர் டாக்டர் S.N.R அவர்களின் இந்த பணிகளை இராணிப்பேட்டை அரக்கோனம் ஆகிய பகுதிகளில் உள்ள பொதுமக்கள் மற்றும் பல்வேறு அமைப்பினர் காவல் துறையினர் ஆகியோர் மனதார பாராட்டிவருகிறார்கள் . போலீஸ் பொதுமக்கள் பொதுநல டிரஸ் நிறுவனத் தலைவர் டாக்டர் S.N.R மற்றும் அதன் நிர்வாகிகள் இந்த பேரிடர் காலகட்டத்தில் செய்து வரும் சிறந்த சேவைகளை போலீஸ் செய்தி டிவி குழுமம் சார்பில் மனதார வாழ்த்துகிறோம்
. செய்தி தொகுப்பு
எம் ஆத்தி முத்து
போலீஸ் செய்தி டிவி செய்தி ஆசிரியர்

