தூத்துக்குடி மாவட்டம், குரும்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பனங்காட்டில் கள்ளச்சாராயம் வடிப்பு – 20 லிட்டர் ஊரல் அழிப்பு – கேஸ் சிலிண்டர், அடுப்பு மற்றும் பானை பறிமுதல் – மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் சம்பவ இடத்தை பார்வையிட்டு சம்மந்தப்பட்ட எதிரிகளை கைது செய்ய உத்தரவு.
*தூத்துக்குடி மாவட்டம், குரும்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் ஸ்ரீவைகுண்டம் காவல் துணை கண்காணிப்பாளர் திரு. வெங்கடேசன் அவர்களிடம் கண்டுபிடித்து உடனே நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார். மேற்படி உத்தரவின்பேரில் ஆழ்வார்திருநகரி காவல் நிலைய ஆய்வாளர் திருமதி. ஜூடி, உதவி ஆய்வாளர் திரு. தாமஸ், ஸ்ரீவைகுண்டம் தனிப்பிரிவு உதவி ஆய்வாளர் திரு. ஜெகநாதன், தலைமைக் காவலர்கள் திரு. லட்சுமணன், தனிப்பிரிவு காவலர் திரு. சந்தோஷ் செல்வம், ஆகியோர் ரோந்து சென்றபோது இருவர் சாராயம் காய்ச்சிக் கொண்டிருந்தனர், அவர்கள் போலீசாரை பார்த்ததும் தப்பி ஓடிவிட்டனர்.*
*இத்தகவலறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ் . ஜெயக்குமார் அவர்கள் சம்பவ இடத்தை பார்வையிட்டு சமமந்தபட்ட எதிரிகளை கைது செய்ய உத்தரவிட்டார்.*
*இதுகுறித்து குரும்பூர் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பவ இடத்திலிருந்த 20 லிட்டர் ஊரலை அழித்து, கள்ளச்சாராயம் காய்ச்சுவதற்கு பயன்படுத்திய கேஸ் அடுப்பு, கேஸ் சிலிண்டர் மற்றும் 2 பானைகளை பறிமுதல் செய்தனர். கள்ளச்சாராயம் காய்ச்சிய இருவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

