தூத்துக்குடி ஸ்பிக் ரோட்டரி கிளப் சார்பில் தூத்துக்குடி மாநகர பகுதிகளில் உள்ள காவலர்களுக்கு முகக்கவசம், சானிடைசர் மற்றும் ஆபீஸ் அலுவலகத்தில் பயன்படுத்தக் கூடிய ஆட்டோமேட்டிக் மெஷின் போன்ற உபகரணங்கள் டவுண் டி.எஸ்.பி பிரகாஷ் அவர்களிடம் வழங்கப்பட்டது.
தூத்துக்குடி,மே,31
கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக இந்தியா முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், காவல்துறையினர், சுகாதாரத் துறையினர், தொடர் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், கொரோனா வைரஸ் எந்த விதத்திலும் பரவும் என்ற அச்சம் இருந்த போதிலும், அவர்கள் தொடர்ந்து வெளிப்புறங்களில் பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில், அவர்களுக்கு நோய்த் தொற்று பரவாமல் இருக்க தூத்துக்குடி ஸ்பிக் ரோட்டரி கிளப் சார்பில் தூத்துக்குடி மாநகர பகுதிகளில் உள்ள காவலர்களுக்கு முகக்கவசம், சானிடைசர் மற்றும் ஆபீஸ் அலுவலகத்தில் பயன்படுத்தக் கூடிய ஆட்டோமேட்டிக் மெஷின் போன்ற உபகரணங்கள் டவுண் டி.எஸ்.பி பிரகாஷ் அவர்களிடம் அவரது அலுவலகத்தில் வைத்து வழங்கினார்கள் . இரவு பகல் என்று பாராமல் கொரோனா தொற்று காலகட்டத்தில் மக்களை பாதுகாக்க பணியாற்றி வரும் தூத்துக்குடி டவுண் போலீஸ்சார்களுக்கு முகக்கவசம், சானிடைசர் போன்ற உபகரணங்களை தூத்துக்குடி டவுண் பகுதிகளில் பணியாற்றி வரும் காவல்துறை ஆய்வாளர்களிடம் இன்று டவுண் டி.எஸ்.பி பிரகாஷ் அவர்கள் வழங்கி போலீஸ்சார்களுக்கு வழங்கிடுமாறு தெரிவித்தார். காவலர்களின் நலனில் தனி அக்கறைகொண்டு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளும் டவுண் டி.எஸ்.பி பிரகாஷ் அவர்கள் காவலர்களுக்கு முகக்கவசம், சானிடைசர் மற்றும் ஆபீஸ் அலுவலகத்தில் பயன்படுத்தக் கூடிய ஆட்டோமேட்டிக் மெஷின் போன்ற உபகரணங்கள் வழங்கிய தூத்துக்குடி ஸ்பிக் ரோட்டரி கிளப் நிர்வாகிகளுக்கு நன்றியை தெரிவித்தார்.
பொது மக்கள் முகக்கவசம் அணியாமல் வெளியை வந்தால் அவர்களுக்கு முக கவசம் வழங்கி இனிமேல் முகக்கவசம் அணியாமல் வெளியே வராதிர்கள் எனவும் அவர்களுக்கு விழிப்புணர்வு தெரிவிக்க காவலர்களுக்கு டி.எஸ்.பி பிரகாஷ். அறிவுறுத்தினார் மேலும் கொரோனா தொற்று பரவாமல் இருக்க முகக்கவசங்கள், கையுறைகள் மற்றும் சானிடைசர் ஆகியவற்றை காவலர்கள் பயன்படுத்தி பாதுகாப்பாக பணிபுரிய வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.
செய்தி தொகுப்பு
போலீஸ் செய்தி டிவிக்காக
எம்.ஆத்தி முத்து
செய்தி ஆசிரியர்

