சென்னை பெருநகர காவல் ஆணையர் அவர்கள் எழும்பூர் காவலர் மருத்துவமனைக்கு பாரத ஸ்டேட் வங்கியால் நன்கொடையாக வழங்கப்பட்ட மருத்துவ உபகரணங்களை பெற்றுக்கொண்டு காவலர் மருத்துவமனைக்கு பயன்பாட்டிற்காக வழங்கினார்
சென்னை பாரத ஸ்டேட் வங்கி எழும்பூர் காவலர் மருத்துவமனைக்கு 5 cot & Bed stretchers, 10 whell chairs 5, 4 stands, Thermometers 2 ஆகிய மருத்துவ உபகரணங்களை நன்கொடையாக வழங்கியுள்ளனர்.
எழும்பூர் காவலர் மருத்துவமனையில் மேற்படி மருத்துவ காரணங்களை காவல் ஆணையரிடம் முறைப்படி ஒப்படைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு அ. கா. விசுவ நாதன், இ. கா. ப, அவர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மருத்துவ உபகரணங்களை பெற்றுக்கொண்டு காவலர் மருத்துவமனைக்கு பயன்பாட்டிற்காக வழங்கினார். மேலும் நன்கொடையாக மருத்துவ உபகரணங்களை வழங்கிய வங்கி உயர் அதிகாரிகளுக்கு காவல் ஆணையர் நன்றி தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் கூடுதல் காவல் ஆணையர் (தலைமையிடம்) ஜெயராம் இ. கா. ப துணை ஆணையாளர்கள் விமலா (தலைமையிடம்) சுதாகர் (நுண்ணறிவுப் பரிவு ) சென்னை பாரத ஸ்டேட் வங்கி துணை பொது மேலாளர்கள் சத்யபிரகாஷ், அதுல், ஸ்ரீ வத்சலா, எழும்பூர் காவல் மருத்துவமனை சீப் மெடிகல் ஆபீசர் திருமதி சித்ரா ஆகியோர் கலந்து கொண்டனர் திருமதி சித்ரா ஆகியோர் கலந்து கொண்டனர்
செய்தி தொகுப்பு
செய்தி ஆசிரியர் எம் ஆத்திமுத்து

