விளாத்திகுளம் அருகே மகன் இறந்ததால் மனவேதனையில் இருந்து வந்த தாய் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது : தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகேயுள்ள துலுக்கன்குளம் காலனி தெருவைச் சேர்ந்தவர் செல்வராஜன் மனைவி வள்ளியம்மாள் (65), இந்த தம்பதியரின் ஒரே மகன் மகேஸ்வரன் (32), கடந்த 6 மாதங்களுக்கு முன் தீக்குளித்து தற்கொலை செய்து காெண்டார்.
மகன் தற்கொலை செய்து கொண்டதால், வள்ளியம்மாள் மிகுந்த மன வேதனையில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று அவர் தனது வீட்டில் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து விளாத்திகுளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.

