தடுப்பூசி போட்டுக் கொள்வதன் அவசியத்தை வலியுறுத்தி, தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தராஜன் விழிப்புணர்வு வீடியோ பதிவிட்டுள்ளார்.
இந்தியா முழுவதும் தடுப்பூசி செலுத்தி கொள்ள மத்திய மாநில அரசுகள் விரைந்து நடவடிக்கை எடுத்து வருகின்றன. அந்த வகையில், புதுச்சேரி மாநிலத்தில் தடுப்பூசி செலுத்தும் பணி முழு வீச்சில் நடந்து வருகிறது.
இதற்காக தடுப்பூசி செலுத்துவது தொடர்பான ஆலோசனை கூட்டமும் அந்த மாநிலத்தில் அடிக்கடி நடந்து வருகிறது.
2 நாளைக்கு முன்புகூட, இது தொடர்பான கருத்தரங்கிலும் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெலுங்கானாவில் இருந்து வீடியோ கான்பரன்ஸ் மூலமாக கலந்து கொண்டார். சுதந்திர தினத்துக்குள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்த வேண்டும் என்று அந்த கூட்டத்தில் அறிவுறுத்தினார்.
மேலும் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களுக்கு சலுகைகளை அறிவித்து ஊக்கப்படுத்த வேண்டும், அப்போது தான் பொதுமக்கள் தாமாக முன்வந்து தடுப்பூசி செலுத்துவார்கள்., எனவே, அதிகாரிகள் இணைந்து பணியாற்றுவதன் மூலமாக, அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த முடியும் என்று தடுப்பூசி குறித்து தமிழிசை சவுந்தராஜன் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.
அந்த வகையில் தற்போதும் தடுப்பூசி போட்டுக் கொள்வது குறித்து ஒரு வீடியோ பதிவிட்டுள்ளார்.. அந்த வீடியோவில் தமிழிசை பேசியதாவது: “தடுப்பூசி நான் போட்டாச்சு.. நீங்க போட்டாச்சா.. தடுப்பூசியை நான் போட்டாச்சு.. நீங்க போட்டாச்சா? போட்டுக் கொள்ளவில்லை என்றால் உடனே சென்று போட்டுக் கொள்ளுங்கள்.. ஏனென்றால் கொரோனாவில் இருந்து நம்மை பாதுகாக்கும் ஆயுதம்தடுப்பூசி.
தடுப்பூசிகளால் எந்த பக்கவிளைவுகளும் வராது.. தடுப்பூசியினால் எந்தவித அபாயகரமான விளைவுகளும் வராது.. ஆனால், கொரோனாவில் அபாயகரமான விளைவுகளை நாம் சந்திக்க நேரிடும்..உடனே செல்லுங்கள்.. தடுப்பூசி போட்டுக் கொள்ளுங்கள்” என்று தமிழிசை சொல்கிறார்.. இந்த விழிப்புணர்வு வீடியோவை தன்னுடைய ட்வீட்டில் தமிழிசை பதிவிட்டுள்ளார்.
நான் போட்டாச்சு….
நீங்க போட்டாச்சா?#VaccinationDrive pic.twitter.com/TwAGpaq9GX— Dr Tamilisai Soundararajan (@DrTamilisaiGuv) June 11, 2021

