நெல்லை மாநகர காவல்துறையின் சட்டம்& ஒழுங்கு துணை ஆணையராக இருந்த சீனிவாசன் திருவாரூர் மாவட்டதிற்கு எஸ்பி யாக மாற்றம் செய்யப்பட்டுள்ளதை தொடர்ந்து சிவகங்கை மாவட்ட எஸ்பி யாக இருந்த ராஜராஜன் நெல்லை மாநகர காவல்துறையின் சட்டம் ஒழுங்கு துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் திருநெல்வேலி துணை கமிஷனராக இரண்டாவது முறையாக பணியமரத்தபட்டுள்ளளார்
கடந்த 2002ஆம் ஆண்டு குரூப்-1 தேர்வின் மூலம் நேரடி டிஎஸ்பியாக காவல்துறை பணியில் இணைந்தவர் ராஜராஜன். மதுரை,திருமங்கலம், தாழையூத்து ஆகிய ஊர்களில் டிஎஸ்பியாக பணியாற்றி 2009 ஆம் ஆண்டு ஏடிஎஸ்பி யாக பணி உயர்வு பெற்று தூத்துக்குடி, சேலம் ஆகிய ஊர்களில் பணியாற்றினார்.
2012ஆம் ஆண்டு எஸ்பியாக பணி உயர்வு பெற்று நெல்லை மாநகர காவல்துறையின் சட்டம் ஒழுங்கு துணை ஆணையராக பணியாற்றினார். பின்னர் மதுரை மாநகர போலீஸ் துணை ஆணையராகவும், விருதுநகர் எஸ்பி யாகவும் பணியாற்றினார். சிவகங்கை எஸ்பி ஆக பணியாற்றிய வந்த நிலையில் தற்போது நெல்லை துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
பொது மக்கள் தரும் மனுக்கள் மீது உடனுக்குடன் விசாரணை நடத்தி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ரவுடிகள்மீது தீவிர கண்காணிப்பு ஏற்படுத்தப்பட்டு தவறு செய்தால் உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியுள்ளார்

