பாஜகவின் ஆதரவாக தமிழ்நாடு ஏகத்துவ பிரச்சார பேரவை செயல்பட்டு வருகின்றது. இதன் தலைவராக. வேலூர் இப்ராஹிம் உள்ளார்.
இவருக்கு தற்போதுதான் பாஜகவின் சிறுபான்மை பிரிவு செயலாளர் பதவி வழங்கபட்டது இவர் பாஜாகாவிற்க்கு ஆதரவாக தொடர்ந்து செயல் பட்டு வருவதால் அதனை பிடிக்காதவர்கள் கூலிப்படையின் உதவியோடு அவரை கொலை செய்ய திட்டியது காவல்துறையின் விசாரனையில் தெரியவந்துள்ளது .
கொலை செய்ய திட்டம் தீட்டும் விசயம் திருவைகுண்ட காவல் துணைக் கண்காணிப்பாளர் வெங்கடேஷ்க்கு ரகசிய தகவல் கிடைக்க அதனை துரிதமாக கையாண்டு தனிப்படை அமைத்து மங்கலக்குறிச்சியை சேர்ந்த ஒருவரையும், கோவையை சார்ந்த ஒருவரையும் கைது செய்து காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் விசாரணை நடத்தி கோவில்பட்டி கிளைச் சிறைச்சாலையில் இருவரையும் அடைத்தனர். இந்த செயல் தூத்துக்குடியில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

