தூத்துக்குடி மாவட்டம் வேம்பாரில் தமிழன்டா கலைக்கூடம் மற்றும் கே. சின்னத்துரை & கோ சார்பாக கொரோனா ஊரடங்கை முன்னிட்டு இன்று (09.06.2021) வேம்பார் காமராஜர் திருமண மஹாலில் நாட்டுப்புற கலைஞர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் ஏழை எளிய மக்கள் 130 பேருக்கு அரிசிப்பை, காய்கறி மற்றும் மளிகைப் பொருட்கள் போன்ற நிவாரண பொருட்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் வழங்கி கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.*
அப்போது அவர் பேசுகையில், அரசு அறிவித்துள்ளவாறு 18 வயதிற்கு மேற்பட்ட பொதுமக்கள் அனைரும் கட்டாயம் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். பொதுமக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளி கடைபிடிக்க வேண்டும். அடிக்கடி கைகளை சோப்பு மற்றும் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும். தமிழக அரசு அவ்வப்போது அறிவித்து வரும் நெறிமுறைகளை பொதுமக்கள் கடைபிடித்து அரசுக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தி சிறப்புரையாற்றினார்.*
இதற்கான ஏற்பாடுகளை தமிழன்டா கலைக்குழு தலைவர் திரு. ஜெகஜீவன் மற்றும் கே. சின்னத்துரை & கோ நிறுவனர் திரு. ஹரி ஆகியோர் செய்திருந்தனர்.*
♻ *இதில் தமிழன்டா கலைக்கூடம் மாநில செயலாளர் திரு. கதிர்வேல், மாநில பொருளாளர் திரு. பிரம்மராஜ், மகளிர் அணி அமைப்பாளர் திருமதி. மாரியம்மாள், கலைக்குழு உறுப்பினர் திரு. மாரிமுத்து உட்பட பலர் கலந்து கொண்டனர்.*
தூத்துக்குடி மாவட்ட தலைமையிடத்து காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் திரு. கார்த்திகேயன், விளாத்திகுளம் காவல் துணை கண்காணிப்பாளர் திரு. பிரகாஷ், விளாத்திகுளம் காவல் நிலைய ஆய்வாளர் திரு. ரமேஷ், உட்பட காவல்துறையினர் பலர் உடனிருந்தனர்.*

