மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பாஸ்கரன் அவர்கள் இன்று காலை பொறுப்பேற்றார்கள்.
மேலும் காவல் கண்காணிப்பாளர் காவல் நிலையத்திற்கு வரும் புகார்கள் மீது உடனுக்குடன் தகுந்த நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் சட்டம் மற்றும் ஒழுங்கை நிலைநாட்டவும் குற்றங்கள் நடக்காமல் தடுக்கவும் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் மேலும் குற்ற சம்பவங்களில் ஈடுபடும் குற்றவாளிகள் நடத்தைகள் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கப்படும் எனவும் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்துள்ளார்கள் பொதுமக்கள் எந்த நேரத்திலும் மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களை தொடர்பு கொண்டு வாட்ஸ் அப்பில் மூலம் புகார் தெரிவிக்க விரும்பினாலும் 94443 96596 என்ற தொலைபேசி எண்ணுக்கு தொடர்பு கொள்ளலாம் என கேட்டுக் கொண்டுள்ளார்கள் தற்போது தமிழக அரசு கொரோனா விதிகளை அமல்படுத்தியுள்ளது .மேற்படி விதிகளை அனைத்து பொதுமக்களும் தவறாது கடைபிடித்து கொரோனா பேரிடர் காலத்தில் காவல் துறைக்கு முழு ஒத்துழைப்பு வழங்குமாறு மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கேட்டுக் கொண்டுள்ளார்கள்
செய்தி தொகுப்பு மதுரை ரத்தினவேல்

