கோவில்பட்டி சுப்பிரமணியபுரம் பகுதியைச் சேர்ந்தவர் அய்யனார் மனைவி பேச்சியம்மாள் (42). இவரிடம் கோவில்பட்டி முத்து நகரைச் சேர்ந்த ஆறுமுக நயினார் மகன் முத்துராமலிங்கம் (44) என்பவர் தான் ஜோசியர் என்று அறிமுகமாகி கடந்த 07.05.2021 அன்று பேச்சியம்மாள் மற்றும் அவரது உறவினரான காசிராஜன், மாரியம்மாள் ஆகியோரிடம் 7½ சவரன் தங்க நகைகளை வாங்கி பேச்சியம்மாளின் வீட்டில் வைத்து பரிகார பூஜை செய்துள்ளார். பின்னர் அந்த நகைகளை திருப்பி கொடுக்காமல் மோசடி செய்துள்ளார்.
இதுகுறித்து பேச்சியம்மாள் அளித்த புகாரின் பேரில் கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு. முருகன் வழக்கு பதிவு செய்து முத்துராமலிங்கத்தை கைது செய்தார். மேலும் அவரிடமிருந்து மோசடி செய்யப்பட்ட ரூபாய் 2,00,000/- மதிப்பிலான 7½ சவரன் தங்க நகைகளும் மீட்கப்பட்டது.

