கொரோன பரவலைத் தடுக்க ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் தற்போது டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன இதனால் சிலர் சாராயம் காய்ச்சி விற்பனை செய்து வரும் நிலையில் அவர்களை காவல்துறையினர் கைது செய்து வருகின்றன.
இந்நிலையில் சிவகங்கை மாவட்டம் திருவேகம்பத்தூர் சார்பு ஆய்வாளர் ஜெயமூர்த்தி மற்றும் மதுவிலக்கு காவலர் பிரபாகரன் ஆகியோர் ரோந்து பணியில் ஈடுபட்டனர் .அப்போது திருவேகம்பத்தூர் காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட திராணி கிராமத்தில் சாராயம் காய்ச்சுவதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது.கிடைத்த தகவலின்படி திராணி கிராமத்தில் ஆய்வு மேற்கொண்டார்.அப்போது முத்துக்கண்ணன் வீட்டின் எதிரே உள்ள சமயல் கொட்டகையில் சாராயம் காய்ச்சிக்கொண்டிருந்த திராணி கிராமத்தை சேர்ந்த முத்துக்கண்ணன் (48) நெடுங்குளம் கிராமத்தை சேர்ந்த துரை (33),செல்வம் (23) ஆகியோர் மூவரை கைது செய்த காவல்துறையினர் அவர்களிடமிருந்து மூன்றரை லிட்டர் சாராயம்,இருசக்கர வாகனம்,சாராயம் காய்ச்ச பயன்படுத்திய பாத்திரம் ஆகியவை கைப்பற்றப்பட்டது. அதேபோல் வெள்ளுர் கிராமத்தில் முனியாண்டி என்பவர் வீட்டின் வரண்டாவில் 40 லிட்டர் சாராய ஊறல் போட்டுள்ளார். வெள்ளுரை சேர்ந்த
முனியாண்டி (60)நாகராஜ் (46) இருவரையும் காவல்துறையினர் கைது செய்து 40 லிட்டர் சாராய ஊறல் கைப்பற்றப்பட்டு கீழே ஊற்றி அழிக்கப்பட்டது.
இச்சம்பவம் குறித்து திருவேகம்பத்தூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து 5 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்
மாவட்ட செய்தியாளர்
தேவகோட்டை கண்ணன்

