தூத்துக்குடியில் பாலியல் தொழில் நடத்திய பெண் உட்பட 2பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் 3 இளம் பெண்கள் மீட்கப்பட்டனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: தூத்துக்குடி சங்கராபுரம் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் பாலியல் தொழில் நடப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சாந்தி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர்.
விசாரணையில், தூத்துக்குடி குரூஸ் புரத்தைச் சேர்ந்த லூமன் மனைவி ஜூலியட் (40), முத்துகிருஷ்ணாபுரம் 3வது தெருவைச் சேர்ந்த நடராஜன் மகன் கருப்பசாமி (38) ஆகியோர் புரோக்கர்களாக செயல்பட்டு அந்த வீட்டில் இளம்பெண்களை வைத்து பாலியல் தொழில் செய்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர்கள் 2பேரையும் கைது செய்தனர். மேலும் அங்கிருந்த 3 இளம்பெண்களை மீட்டு தூத்துக்குடியில் உள்ள பெண்கள் காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

