சிவகங்கை மாவட்டத்தில் புதிதாக பதவியேற்றுள்ள எஸ்.பி செந்தில்குமார் அவர்கள் நேற்று தேவகோட்டை சரகத்திற்கு உட்பட்ட காவல் நிலைய பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் தேவகோட்டை காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தேவகோட்டை சரகத்திற்கு உட்பட்ட காவல்நிலையத்தில் பணிபுரியும் ஆய்வாளர்கள்,சார்பு ஆய்வாளர்கள் மற்றும் தனி பிரிவு காவலர்கள் ஆகியோர்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் எஸ்.பி செந்தில்குமார் கூறுகையில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த அரசு அமல்படுத்தியுள்ள உத்தரவை முழுமையாக செயல்படுத்த வேண்டும்,பொதுமக்களிடம் கனிவுடன் நடந்துகொள்ளவேண்டும்,பொதுமக்கள் கொடுக்கும் புகாா்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென காவல்துறை அதிகாரிகளிடம் கூறினார். பின்னர் தேவகோட்டை செய்தியாளர்கள் புதிதாக பொறுப்பேற்றுக்கொண்ட எஸ்.பி செந்தில்குமார் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
மாவட்ட செய்தியாளர்: தேவகோட்டை கண்ணன்

