மேலூர் அருகே கிராம பகுதிகளில், கொரோனா பரவல் தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள தூய்மை பணியாளர்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்து நிவாரணப் பொருட்கள் வழங்கிய சுப்ரீம் அரிமா சங்கத்தினர்…
மதுரை மாவட்டம் மேலூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட சில கிராமங்களில் தற்போது கொரோனா தொற்று அதிகரித்து வரும் சூழ்நிலையில், இப்பகுதிகளில் கொரோனா பரவலை தடுக்கும் விதமாக தூய்மை பணியில் ஈடுபட்டுள்ள தூய்மை பணியாளர்களை கவுரவிக்கும் விதமாக,
மேலூர் சுப்ரீம் அரிமா சங்கத்தினர், மேலூர் அருகே உள்ள தெற்குதெரு ஊராட்சியில் உள்ள 20 தூய்மை பணியாளர்களுக்கு மாலை அணிவித்து அரிசி, மளிகை பொருட்கள் உள்ளிட்ட நிவாரணப் பொருட்களை மேலூர் காவல்துறை ஆய்வாளர் சார்லஸ் தலைமையில் வழங்கினர்,
இந்நிகழ்ச்சியில் மேலூர் சுப்ரீம் அரிமா சங்க தலைவர் மணிவாசகம், செயலாளர்கள் கிச்சா என்ற கிருஷ்ணன், பரமசிவம், பொருளாளர் மூர்த்தி, அரிமா சங்க நிர்வாகி சிவகுமார், முன்னாள் கவர்னர் கதிரேசன், மண்டல தலைவர் மெய்யப்பன், வட்டாரத் தலைவர் முருகேஷன் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் ஏற்பாடு செய்து கலந்துக் கொண்டனர் …


