• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

தூத்துக்குடியில் ரேசன் அரிசி கடத்திய 4 பேர் கைது – 3500 கிலோ எடையுள்ள 70 மூட்டை ரேசன் அரிசி, ஒரு ஆம்னி வேன், டாட்டா சுமோ கார் பறிமுதல்.

policeseithitv by policeseithitv
June 7, 2021
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
தூத்துக்குடியில் ரேசன் அரிசி கடத்திய 4 பேர் கைது – 3500 கிலோ எடையுள்ள 70 மூட்டை ரேசன் அரிசி, ஒரு ஆம்னி வேன், டாட்டா சுமோ கார் பறிமுதல்.
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ரேசன் அரிசி கடத்திய 4 பேர் கைது – 3500 கிலோ எடையுள்ள 70 மூட்டை ரேசன் அரிசி, ஒரு ஆம்னி வேன் மற்றும் டாட்டா சுமோ கார் பறிமுதல்.

தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய எல்லைகுட்பட்ட பகுதியல் ரேசன் அரிசி கடத்துவதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் உத்தரவின்பேரில் தூத்துக்குடி காவல் துணை கண்காணிப்பாளர் திரு. கணேஷ் அவர்கள் மேற்பார்வையில் தென்பாகம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு. வேல்ராஜ் தலைமையில் முதல் நிலைக் காவலர்கள் திரு. பென்சிங், திரு. மாணிக்கராஜ், திரு. சாமுவேல், திரு. மகாலிங்கம், திரு. செந்தில், திரு. திருமணி மற்றும் திரு. முத்துப்பாண்டி ஆகியோர் அடங்கிய தனிப்படையினர் தூத்துக்குடியில் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது புதிய பேரூந்து நிலையம் அருகில் உள்ள சாலையில் வேகமாக வந்த ஆம்னி வேன் மற்றும் டாட்டா சுமோவை மடக்கி அவர்கள் சோதனை செய்ததில், அந்த வாகனங்களிலிருந்த தூத்துக்குடி அண்ணாநகர் 9வது தெருவைச் சேர்ந்த செல்லையா மகன் சிவப்பிரகாஷ் (27), டூவிபுரத்தைச் சேர்ந்த பாலு மகன் அருண் குமார் (25), ராஜகோபால் நகரைச் சேர்ந்த கருப்பசாமி மகன் மணிகண்டன் (26) மற்றும் வி.எம்.எஸ். நகரைச் சேர்ந்த குமார் மகன் கார்த்திக் ஆகியோர் 50 கிலோ எடையுள்ள 70 மூட்டைகளில் 3 ½ டன் ரேசன் அரிசியை கடத்திச் செல்வது கண்டுபிடிக்கப்பட்டது. தனிப்படை போலீசார் மேற்படி 4 பேரையும் கைது செய்து விசாரணை செய்ததில் அவர்கள் தூத்துக்குடி அண்ணாநகரில் உள்ள ஜீவா மாவு மில் உரிமையாளர் ஆறுமுகச்சாமி என்பவரிடம் வேலை செய்து வருவதாகவும், அங்கு கொண்டு செல்வதாகவும் தெரிவித்தனர்.

மேற்படி தனிப்படை போலீசார் கைது செய்த 4 பேரையும், பறிமுதல் செய்த 70 மூடை அரிசி, கடத்துவதற்கு பயன்படுத்திய ஒரு ஆம்னி வேன் மற்றும் டாட்டா சுமோ கார் ஆகியவற்றையும் தூத்துக்குடி குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை அதிகாரிகளிடம் உரிய நடவடிக்கைக்காக ஒப்படைத்தனர்.

 

Previous Post

காவல் பணியில் ஈடுபடுபவர்களுக்கு தொடரும் இடையூறுகள் !! பாரபட்சமில்லாமல் அதிரடி நடவடிக்கை எடுத்தால் மட்டுமே தீர்வு கிடைக்கும் .. தமிழக முதல்வருக்கு மக்கள் உரிமைகள் பாதுகாப்பு கழகம் வேண்டுகோள்

Next Post

காயாமொழியில் மதர் சமூக சேவை நிறுவனம் நடத்திய கொரோனா தடுப்பூசி விழிப்புணர்வு முகாமில் ஏ.எஸ்.பி.,ஹர்ஷ்சிங் ஐ.பி.ஏஸ்., முககவசம், கபசுர குடிநீர் வழங்கினார்

Next Post
காயாமொழியில் மதர் சமூக சேவை நிறுவனம் நடத்திய கொரோனா தடுப்பூசி விழிப்புணர்வு முகாமில் ஏ.எஸ்.பி.,ஹர்ஷ்சிங் ஐ.பி.ஏஸ்., முககவசம், கபசுர குடிநீர் வழங்கினார்

காயாமொழியில் மதர் சமூக சேவை நிறுவனம் நடத்திய கொரோனா தடுப்பூசி விழிப்புணர்வு முகாமில் ஏ.எஸ்.பி.,ஹர்ஷ்சிங் ஐ.பி.ஏஸ்., முககவசம், கபசுர குடிநீர் வழங்கினார்

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In