காவல் பணியில் ஈடுபடுபவர்களுக்கு தொடரும் இடையூறுகள் !! பாரபட்சமில்லாமல் அதிரடி நடவடிக்கை எடுத்தால் மட்டுமே தீர்வு கிடைக்கும் .. தமிழக முதல்வருக்கு மக்கள் உரிமைகள் பாதுகாப்பு கழகம் வேண்டுகோள…
************””””””””””””””””
கொரோனா ஊரடங்கின் போது சாலைகளில் பாதுகாப்பு பணியில் உள்ள காவல் துறையினர்கள் இரவு பகல் பாராது சரியான நேரத்தில் உணவு சாப்பிட முடியாது.இயற்கை உபாதைகள் வெளியில் சொல்ல முடியாது.. விடுமுறை கிடையாது.. இப்படி மக்கள் நலம் காக்க உயிர் காக்க தங்கள் உயிரையும் பொருட்படுத்தாது தியாக மனதோடு பணிசெய்து வருகிறார்கள்.. ஆனால் முழு ஊரடங்கு காலத்தில் பொது மக்கள் சிலர் தமிழக அரசின் விதிமுறைகள் படி நடந்து கொள்வதும் இல்லை.. ஒத்துழைப்பு கொடுப்பதில்லை..இ.பாஸ் மற்றும் இ.பதிவு இருந்தால் தான் வெளியில் அதுவும் மிகவும் அவசியம் அவசரம் என்றால் மட்டுமே செல்ல வேண்டும் என தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது… காவல் துறையினர் சோதனை செய்வது கட்டாயம் அவசியம்.. அரசின் விதிமுறைகள் படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.. ஆனால் கடந்த வாரங்களில் பல மாவட்டங்களில் காவல்துறை அதிகாரிகளோடும் காவலர்களோடும் சிலர் நடந்து கொண்ட விதம் சட்டத்தை மதிக்காத செயல் அருவருக்கத்தக்கதாக உள்ளது… சட்டம் அறிந்தவர்கள் படித்தவர்கள் நல்ல உயர் நிலையில் உள்ளவர்கள் கேவலமாக நடந்துள்ளார்கள்…வெளி மாவட்டத்தில் இரவு அனுமதி பெறாமல் வந்த சரக்கு லாரி சோதனை செய்து அபராதம் கட்ட வேண்டும் என்று சொன்ன போக்குவரத்து உதவி ஆய்வாளரையும் காவலர்களையும் அங்கு வந்த நபர் மிரட்டுகிறார்.. சென்னை அண்ணா நகரில் இரவு இருசக்கர வாகனங்களை நிறுத்தி சோதனை செய்த உதவி ஆய்வாளரை ஒரு நபர் ஆபாச வார்த்தைகளால் பேசி அடிக்க போகிறார்.நேற்று முன் தினம் முகக்கவசம் அணியாமல் இ.பதிவு இல்லாமல் காரை ஓட்டி வந்த பெண்ணை போக்குவரத்து உதவி ஆய்வாளர் காவலர்கள் அபராதம் கட்ட வேண்டும் என்றனர்.உடனே அந்த பெண்ணுக்கு ஆதரவாக அம்மா மிகவும் கேவலமான ஆபாச வார்த்தைகளால் காவல் பணியில் இருக்கும் காவல் துறையினரை வாடா போடா என்றும் யூனிபார்மை கழட்டி விடுவேன்.என்று மிரட்டி அடிக்க வருகிறார்.. நேற்று ஒரு ஆட்டோ ஓட்டுனர் பெண் உதவி ஆய்வாளரை அசிங்கமான வார்த்தைகள் பயன் படுத்தி அடிக்க வருகிறார்.. அருகில் உள்ள காவலர்கள் அதை தடுக்கவோ கண்டிக்கவோ இல்லை… இப்படி பல இடங்களில் பல சம்பவங்கள் அரங்கேறிக் கொண்டு தான் இருக்கிறது… இந்த சம்பவங்கள் மக்கள் மத்தியில் தவறான முன்னுதாரணம் கற்பித்து விடும்.. காவல் துறை மீது மக்கள் மத்தியில் பயம் இல்லாமல் போய்விட்டது.. காவல் துறையினர்களை பணி செய்ய விடாமல் அவர்கள் மன உளைச்சலையும் மன அழுத்தத்தையும் உண்டாக்கினால் காவல் துறை எப்படி சுதந்திரமாக செயல்பட முடியும்.. இப்படி பட்ட தவறான சம்பவங்கள் நடைபெறும் இடங்களில் மற்ற காவலர்கள் அதிகாரிகள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பது வேதனையாக இருக்கிறது… ஏன் மற்ற காவலர்கள் ஏன் தடுக்கவில்லை..பயமா? இல்லை பாதிக்கப்படுகிறவர்கள் மீது உள்ள வெறுப்பா… இந்த நிலை தொடர்ந்தால் காவல் துறை சுதந்திரமாக செயல்பட முடியாது.. சமூகத்தில் காவல் பணி முழுமையாக இருக்காது…பல மக்கள் செல்லும் சாலையில் காவல் பணியில் உள்ளவர்களை ஆபாசமாக பேசி அடிக்க வருவது சினிமா படத்தில் வருவது போல நடக்கும் செயல்கள் தடுத்து நிறுத்தப் பட வேண்டும்.. சில காவல் அதிகாரிகள் பெயரை சொன்னாலே குற்றவாளிகள் பயந்து குற்றம் செய்வதை நிறுத்தி விடுவார்கள்.. பொது மக்கள் பாதுகாப்புடன் சந்தோஷமாக சுதந்திரமாக வாழ்ந்த சரித்திரம் உண்டு… காவல் துறை உங்கள் நண்பன் என்ற சொல்லுக்கு விளக்கம் தெரியவில்லை… நமக்காக நம் நாட்டுக்காக தான் காவல் துறை இருக்கிறது… காவலர்களும். மனிதர்கள் தான்.அவர்களுக்கும் இதயமும் ஆசா பாசமும் உணர்வுகளும் அன்பும் கோபமும் தன் மானமும் ஆசைகளும் உண்டு… காக்கிச்சட்டை போட்டவுடன் அவை எல்லாவற்றையும் ஒதுக்கி வைத்து விட்டு மக்களுக்கு உங்களுக்காக உங்கள் சந்தோஷத்திற்காக நாட்டின் பாதுகாப்பிற்காக. கடமை கண்ணியம் கட்டுப்பாடு என்ற சொல்லுக்கு இலக்கணம் வகுத்து பணி செய்கிறார்கள்… அவர்களும் மனிதர்கள் தான்.. மக்கள் காவல் துறையினர்களை மனிதர்களாக நண்பர்களாக மதியுங்கள்… போற்றுங்கள்.. ஒத்துழைப்பு கொடுங்கள்…

மாண்புமிகு தமிழக முதல்வர் தளபதி அவர்கள். காவல் துறையினர்களுக்கு ஏற்படக்கூடிய இந்த வேதனை தரக்கூடிய சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க சம்பந்தப்பட்ட நபர் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கவேண்டும்… நான் யார் தெரியுமா என்று மிரட்டும் நபர்கள் மீது சரியான நடவடிக்கை எடுத்து இனிமேல் இப்படிப்பட்ட தவறான சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க வேண்டும்.காவல்துறைக்கு இருக்கக்கூடிய கண்ணியத்தை பெருமையை நிலை நாட்ட வேண்டும் என்று மக்கள் உரிமைகள் பாதுகாப்பு கழகம் சார்பாக கேட்டுக் கொள்கிறேன்….
மக்கள் உரிமைகள் பாதுகாப்பு கழகம் தலைவர் டாக்டர் பாலசுப்ரமணியன்

