2000 ஆண்டு முதல் 2020 ஆம் ஆண்டு வரை உளவுத்துறை மற்றும் சிபிஐ பணிகளில் அதிகமாக பணியாற்றியவர்
நேர்மையானவர் மற்றும் அதே சமயத்தில் எளிமையானவர் என்ற பெயரும் உண்டு
தமிழக அரசு பல்வேறு ஆலோசனைக்கு பிறகு உளவுத்துறை ஐ ஜி யாக ஈஸ்வரமூர்த்தி அவர்களை நியமித்தது.
தமிழகத்தில் 2021 சட்டமன்ற பொது தேர்தலுக்கு இன்னும் ஒரு ஆண்டுகள் உள்ள நிலையில் ஐ ஜி நியமனம் அனைவரையும் திரும்பிபார்க்க வைத்துள்ளது இவர் பணியாற்றிய விபரம் 
ஈஸ்வர மூர்த்தி ஐ பி எஸ் அவர்கள் பெரும்பாலும் உளவு பிரிவு பணிகளில் பணியாற்றியவர் இவர் எஸ். பி. சி ஐ டி எஸ். பி யாக சென்னையில் 14/12/2000 முதல் 25/07/2001 வரை பணியாற்றி உள்ளார். 26/07/2001 முதல் 16/05/2003 வரை கோயம்புத்தூர் விஜிலென்ஸ் எஸ். பி யாக பணியாற்றி உள்ளார். 21/05/2003 முதல் 09/10/2003 வரை எஸ். பி. சி ஐ டி
எஸ். பி யாக சென்னையில் பணியாற்றி உள்ளார். 09/10/2003 முதல் 31/10/2004 வரை TNCF பிரிவில் சென்னையில் எஸ். பி யாக பணியாற்றி உள்ளார். 01/11/2004 முதல் 18/09/2005 வரை துணை ஆணையர் சென்னை இன்டெலிஜென்ஸ் பிரிவில் பணியாற்றி உள்ளார். 19/09/2005 முதல் 14/11/2007 வரை ஸ்பெஷல் டிவிசன் எஸ். பி. சி ஐ டி சென்னை பணியாற்றி உள்ளார். 14/12/2007 முதல் 16/08/2012 வரை
சி பி ஐ யில் பணியாற்றி உள்ளார். 17/08/2012 முதல் 04/06/2014 வரை
டிஐஜி யாக 
சி பி ஐ ஏசிபி சென்னையில் பணியாற்றி உள்ளார். அதனை தொடர்ந்து 10/06/2014 முதல் 30/12/2016 வரை
டி ஐ ஜி யாக இன்டெலிஜென்ஸ் (உள் நாட்டு பாதுகாப்பு பிரிவு )பணியாற்றி உள்ளார். 30/12/2016 முதல் 30/06/2019 வரை
ஐ ஜி யாக உளவுப்பிரிவு (உள்நாட்டு பாதுகாப்பு ) பிரிவில் பணியாற்றி உள்ளார். 01/07/2019 முதல் 30/05/2020 வரை சென்னை மத்திய குற்ற பிரிவு கூடுதல் ஆணையர் ஆக பணியாற்றி வருகிறார் இந்நிலையில் உளவுத்துறை ஐ ஜி சத்திய மூர்த்தி அவர்கள் இன்று ஓய்வு பெற்றுள்ள நிலையில்
இந்த இடத்திற்கு ஈஸ்வர மூர்த்தி அவர்களை தமிழக அரசு இன்று 30/05/2020 உளவு துறை ஐ ஜி யாக நியமித்து உள்ளது

