தூத்துக்குடி மாவட்டம், தமிழன்டா கலைக்கூடம் சார்பாக நலிவடைந்த சாலையோர வியாபாரிகள் மற்றும் ஏழை, எளிய மக்கள் 70 பேருக்கு கொரோனா கால ஊரடங்கை முன்னிட்டு அரிசிப்பை, காய்கறி மற்றும் மளிகைப் பொருட்கள் இன்று வி.வி.டி. சந்திப்பில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் வழங்கினார்.*
*தூத்துக்குடி மாவட்ட தமிழன்டா கலைக்கூடம் சார்பாக நலிவடைந்த சாலையோர வியாபாரிகள் மற்றும் ஏழை, எளிய மக்கள் 70 பேருக்கு தூத்துக்குடி வி.வி.டி சந்திப்பில் அரிசிப்பை, காய்கறி மற்றும் மளிகை அடங்கிய நிவாரண தொகுப்புகளை வழங்க தமிழன்டா கலைக்கூடம் தலைவர் திரு. ஜெகஜீவன் மற்றும் குழுவினர் ஏற்பாடு செய்திருந்தனர். அதன்படி இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு நிவாரணப் பொருட்களை வழங்கினார்.*
*இந்நிகழ்ச்சியில் தூத்துக்குடி காவல் துணை கண்காணிப்பாளர் திரு. கணேஷ், தென்பாகம் உதவி ஆய்வாளர் திரு. முத்துகணேஷ், தனிப்பிரிவு தலைமை காவலர்கள் திரு. கந்தசுப்பிரமணியன், திரு. மாரிக்குமார் உட்பட காவல்துறையினர் பலர் கலந்து கொண்டனர்.*

