தூத்துக்குடி வணிகர் சங்க பேரமைப்பு சார்பாக கொரோனா கால ஊரடங்கை முன்னிட்டு ஏழை, எளிய மக்கள் பிரையண்ட் நகர் 6வது தெருவில் 450 பேருக்கு மதிய உணவு பொட்டலங்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் வழங்கினார்.*
*தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பாக ஏழை, எளிய மக்கள் 450 பேருக்கு பிரையண்ட் நகர் 6வது தெருவில் மதிய உணவு பொட்டலங்கள் வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதனை இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ஏழை, எளிய மக்களுக்கு வழங்கினார்.*
*இதற்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தூத்துக்குடி மாவட்ட தலைவர் சோலையப்பராஜா மற்றும் மகளிர் அணி தலைவி திருமதி. ராஜம் உள்ளிட்ட சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் செய்திருந்தனர்.*
*தூத்துக்குடி காவல் துணை கண்காணிப்பாளர் திரு. கணேஷ், தென்பாகம் உதவி ஆய்வாளர் திரு. முத்துகணேஷ், தனிப்பிரிவு தலைமை காவலர்கள் திரு. கந்தசுப்பிரமணியன், திரு. மாரிக்குமார் உட்பட காவல்துறையினர் பலர் கலந்து கொண்டனர்.*

