தூத்துக்குடி மாவட்ட சர்வதேச உரிமைகள் கழகம் சார்பில் கொரோனா கால ஊரடங்கை முன்னிட்டு தூத்துக்குடி நிகிலேஷன் நகரில் வசிக்கும் 250 ஏழை, எளிய மக்களுக்கு அரிசிப் பை, காய்கறி மற்றும் மளிகைப் பொருட்கள் அடங்கிய நிவாரண தொகுப்புகளை இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.*
*இன்று தூத்துக்குடி நிகிலேஷன் நகரில் வசிக்கும் ஏழை, எளிய மக்கள் 250 பேருக்கு தூத்துக்குடி மாவட்ட சர்வதேச உரிமைகள் கழகம் சார்பில் கொரோனா கால ஊரடங்கை முன்னிட்டு அரிசிப்பை, காய்கறி மற்றும் மளிகைப் பொருட்கள் வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. இதில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் நிவாரணப் பொருட்களை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.*
*அப்போது அவர் பேசுகையில், அரசு அறிவித்துள்ளவாறு 18 வயதிற்கு மேற்பட்ட பொதுமக்கள் அனைரும் கட்டாயம் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். பொதுமக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளி கடைபிடிக்க வேண்டும். அடிக்கடி கைகளை சோப்பு மற்றும் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும். தமிழக அரசு அவ்வப்போது அறிவித்து வரும் நெறிமுறைகளை பொதுமக்கள் கடைபிடித்து அரசுக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.*
*இதற்கான ஏற்பாடுகளை சர்வ தேச உரிமைகள் தூத்துக்குடி மாவட்ட தலைவர் திருமதி. ராஜலெட்சுமி ராஜ்குமார், மாநில துணைத் தலைவர் திரு. காளிராஜ் பாண்டியன், மாவட்ட துணைத் தலைவர் திரு. சுந்தர், மாவட்ட பொருளாளர் பெசி நிர்மல், மாவட்ட மருத்துவ அணி செயலாளர் திரு. மாரியப்பன் ஆகியோர் செய்திருந்தனர்.*
*இந்நிகழ்ச்சியில் தூத்துக்குடி காவல் துணை கண்காணிப்பாளர் திரு. கணேஷ், உதவி ஆய்வாளர் திரு. முத்துகணேஷ், தனிப்பிரிவு உதவி ஆய்வாளர் திரு. நம்பிராஜன், தலைமைக் காவலர் திரு. கலைவாணர் உட்பட காவல்துறையினர் பலர் கலந்து கொண்டனர்.*

