தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பாக தாளமுத்துநகர் பகுதியைச் சேர்ந்த ஏழை, எளிய மக்கள் 50 பேருக்கு ஆன்ட்ரூஸ் கிளோரி மஹாலில் கொரோனா கால ஊரடங்கை முன்னிட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் உத்தரவுப்படி நிவாரணப் பொருட்கள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதன்படி இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் நிவாரணப் பொருட்களை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
*அப்போது அவர் பேசுகையில், அரசு அறிவித்துள்ளவாறு 18 வயதிற்கு மேற்பட்ட பொதுமக்கள் அனைரும் கட்டாயம் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். பொதுமக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளி கடைபிடிக்க வேண்டும். அடிக்கடி கைகளை சோப்பு மற்றும் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும். தமிழக அரசு அவ்வப்போது அறிவித்து வரும் நெறிமுறைகளை பொதுமக்கள் கடைபிடித்து அரசுக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தி சிறப்புரையாற்றினார்.*
*இதற்கான ஏற்பாடுகளை தாளமுத்துநகர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் திருமதி. ஜெயந்தி தலைமையிலான போலீசார் செய்திருந்தனர்.*
*இந்நிகழ்ச்சியில் தூத்துக்குடி காவல் துணை கண்காணிப்பாளர் திரு. கணேஷ், தாளமுத்துநகர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் திருமதி. ஜெயந்தி, உதவி ஆய்வாளர்கள் உட்பட காவல்துறையினர் பலர் கலந்து கொண்டனர்.


