திருச்செந்தூரில் சின்னத்துரை அன் கோ சார்பில் கொரோனா கால ஊரடங்கை முன்னிட்டு பொதுமக்களுக்கு நிவாரண பொருட்களை எஸ்பி ஜெயக்குமார் வழங்கினார்.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் சின்னத்துரை அன் கோ சார்பில் கரோனா கால ஊரடங்கை முன்னிட்டு தூய்மைப் பணியாளாகள், ஆட்டோ ஓட்டுனர்கள், மாற்றுத்திறனாளிகள், ஏழை, எளிய மக்கள் 500 பேருக்கு அரிசி, பருப்பு, காய்கறி மற்றும் மளிகைப் பொருட்கள் அடங்கிய நிவாரண தொகுப்புகளை இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வழங்கினார்.
அப்போது அவர் பேசுகையில், கரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து நம்மை காப்பாற்றிக் கொள்வதற்கு தடுப்பூசி போட்டுக் கொள்வதுதான் மிக முக்கியமான தீர்வாகும். ஆகவே அரசு அறிவித்துள்ளவாறு 18 வயதிற்கு மேற்பட்ட பொதுமக்கள் அனைரும் கட்டாயம் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். பொதுமக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளி கடைபிடிக்க வேண்டும். வரும் திங்கட் கிழமை முதல் சில தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை 14.06.2021 காலை 6.00 மணி வரை தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழக அரசு அறிவித்து வரும் நெறிமுறைகளை பொதுமக்கள் கடைபிடித்து முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்று பேசினார்.
இதற்கான ஏற்பாடுகளை திருச்செந்தூர் சின்னத்துரை அன் கோ உரிமையாளர்கள் ஹரிராமகிருஷ்ணன் மற்றும் நமச்சிவாயம் ஆகியோர் செய்திருந்தனர். இந்நிகழ்ச்சியில் திருச்செந்தூர் உதவி காவல் கண்காணிப்பாளர் ஹர்ஷ் சிங், திருசெந்தூர் தாலுகா காவல் நிலைய காவல் ஆய்வாளர் ஞானசேகரன், காவல்துறை போக்குவரத்து பிரிவு காவல் உதவி ஆய்வாளர் வேல்முருகன், திருச்செந்தூர் கோவில் காவல் நிலைய உதவி ஆய்வாளர் கல்யாணசுந்தரம் உட்பட காவல்துறையினர் பலர் கலந்து கொண்டனர்.

