தூத்துக்குடியில் தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி பங்களிப்புடன் அடர்காடுகள் அமைக்கும் பணியை கனிமொழி எம்பி தொடங்கி வைத்தார்.
உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு வ.உ.சி துறைமுக பொறுப்புக்கழகம் மற்றும் தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி பங்களிப்புடன், தூத்துக்குடி மாவட்டத்தில் அடர்காடுகள் அமைக்கும் பணியினை மாநகராட்சிக்குட்பட்ட, பாளையங்கோட்டை சாலையில் மரக்கன்று நட்டு தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினரும், திமுக நாடாளுமன்றக்குழு துணைத் தலைவருமான கனிமொழி தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்வில், தமிழக சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சரும், தூத்துக்குடி வடக்கு மாவட்ட பொறுப்பாளருமான கீதா ஜீவன் எம்எல்ஏ, மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் ஷரண்யா அறி, மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜெகன் பெரியசாமி மற்றும் கழக நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

