திருப்பத்தூர் மாவட்டத்தில் பணிபுரிந்து வரும் காவலர்களின் பணியை ஊக்குவிக்கும் பொருட்டு “வாரத்தின் சிறந்த காவலராக” தேர்வு செய்து பாராட்டுப் பத்திரம், கேடயம் மற்றும் புத்தகங்கள் பரிசாக வழங்கப்பட்டது
Baskar – PC 1706 வாணியம்பாடி நகர காவல் நிலையம். தற்போது கொரோனா பெருந்தொற்று காலத்தில் மிக சிறப்பாக பணிசெய்து வரும் இவா் வாணியம்பாடி நகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கொரோனா தொற்று நோய் ( positive ) உள்ள நபா்களை கண்டுபிடித்து மருத்துவ பணியாளா்கள் உதவியுடன் மருத்துவமனை & மருத்துவ பாரமரிப்பு மையத்திற்கு அனுப்பி வைப்பதுடன் அவா்களுக்கு தேவையான உதவிகள் செய்துவருகிறார். மற்றும் தனியாரிடம் இருந்து 30 ஆக்சிஜன் லிண்டர் பெற்று கொடுத்து உதவினார்.
இந்த சிறப்பான பணி செய்தமைக்காக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஊக்கத்தொகையை வழங்கி ஊக்குவித்தார்.
திருப்பத்தூர் மாவட்ட பொது மக்கள் தங்கள் பகுதியில் உள்ள காவல் நிலையங்களில் பணியாற்றும் காவலர்களில் சிறந்த முறையில் பணி செய்பவர்களை ஊக்குவிக்க விரும்பினால் அக்காவலர் குறித்த விவரங்களையும், அக்காவலர் செய்த சிறப்பான பணியையும் குறித்து குறுஞ்செய்தியாக 9486242428 என்ற எண்ணிற்கு அனுப்ப கேட்டுக் கொள்ளப்படுகிறது

