சென்னை பெருநகர காவல் நுண்ணறிவுப்பிரிவு துணை ஆணையாளர் திரு.திருநாவுக்கரசு, இ.கா.ப அவர்கள் கொரோனா தொற்று பராவமால் இருப்பதற்காக களப்பணியாற்றும் காலர்கள், மருத்துவர்கள் மற்றும் தூய்மை பணியாளர்களை பாராட்டி “சலாம் போடுவோம் சல்யூட் செய்வோம்” என்ற பெயரில் பாடலை எழுதி பாடியுள்ளார்.
மேற்படி பாடலின் காணொளியை சென்னை பெரு நகர காவல் ஆணையாளர் திரு.அ.கா.விசுவநாதன், இ.கா.ப அவர்கள் நேற்று (27.05.2020) மாலை வெளியிட்டார். இந்நிகழ்ச்சியில் கூடுதல் காவல் ஆணையாளர் (தலைமையிடம்) திரு.எச்.எம்.ஜெயராம், இ.கா.ப, திரு.அருண், இ.கா.ப, (போக்குவரத்து) திரு.பிரேம் ஆனந்த் சின்ஹா, இ.கா.ப (தெற்கு) நுண்ணறிவுப்பிரிவு துணை ஆணையாளர்கள் திரு.திருநாவுக்கரசு, இ.கா.ப, திரு.சுதாகர், ஆகியோர் கலந்து கொண்டனர்.

