நெல்லையில் பல்வேறு கட்சிகளில் இருந்து விலகி அதிமுகவில் மாவட்ட செயலாளர் தலைமையில் 40 பேர் இணைந்தனர்
பாளை கேடிசி நகரைச் சேர்ந்த பாலு ராமச்சந்திரன் ராஜேந்திரன் ராமகிருஷ்ணன் உள்பட 40 பேர் பல்வேறு கட்சிகள் இருந்து விலகி அதிமுகவில் இணையும் நிகழ்ச்சி நெல்லை மாநகர் மாவட்ட அதிமுக அலுவலகத்தில் வைத்து மாவட்ட செயலாளர் தச்சை கணேசராஜா முன்னிலையில் 40 வாலிபர்கள் தங்களை இணைத்துக் கொண்டு புதியதாக சேர்ந்த இளைஞர்களுக்கு அதிமுக மாவட்டச் செயலாளர் உறுப்பினர் படிவத்தில் வழங்கினார் அப்போது மாவட்ட செயலாளர் தச்சை கணேசராஜா பேசுகையில் அதிமுகவை ஜெ. காட்டிய வழியில் முதல்வர் இ.பி.எஸ். துணை முதல்வர் ஓபிஎஸ் திறம்பட வழிநடத்துகின்றனர் ஆட்சி சிறப்பாக செயல்பட்டு வருகிறது இளைஞர்கள் அதிமுக வுக்கு வந்திருப்பது வரவேற்கத்தக்கது அதிமுக எப்போதும் உறுதுணையாக இருக்கும் என்று கூறினார் இந்நிகழ்ச்சியில் முன்னாள் மாவட்ட செயலாளர் செந்தில்ஆறுமுகம், பேரவை செயலாளர் ஜெரால்டு ,போக்குவரத்து பிரிவு வி.சி .வேல்பாண்டியன், ,பகுதி செயலாளர்கள் ஜெனி, மாதவன்,வழக்கறிஞர்கள் ராஜேஸ்வரன், வெயிலு முத்து, பேரவை துணைச் செயலாளர் திருத்து கே. எம். சின்னதுரை வட்டச் செயலாளர் முறுக்கு முருகன்,எம். கே. ராஜா, எம். சி .ராஜன்.பூக்கடை சப்பானி முத்து, பெல் பாலசுப்பிரமணியன் .வி.பி. பாண்டி,தருவை காமராஜ், மகளிர் அணி முன்னாள் கவுன்சிலர் முத்துலட்சுமி, பாப்பாரத்தினம்,மாரியம்மாள், மற்றும் கட்சி நிர்வாகிகள் திரளானோர் கலந்து கொண்டனர்
செய்தி தொகுப்பு
போலீஸ் டிவி க்காக
நெல்லை கொம்பன் ராஜ்

