ஸ்ரீவைகுண்டம் பேரூராட்சிக்கு 3 ஆண்டுகளாக நிரந்தர செயல்அலுவலர் இல்லாத அவலநிலை போக்க உடனடியாக பணியிடம் நிரப்ப மாவட்ட ஆட்சியரிடம் ஸ்ரீவைகுண்டம் எம்எல்ஏ ஊர்வசி அமிர்தராஜ் நேரில் மனு அளித்தார்
ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட ஊர்வசி அமிர்தராஜ் தொகுதியில் பம்பரமாக சுழன்று மக்கள் பணியில் ஈடுபட்டு வருகிறார். தற்போது, கொரானா நோய் தொற்று காரணமாக ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில், பொதுமக்களை கொரானா தடுப்பூசி போட்டுக்கொள்ள பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகிறார். மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் முன்னுதாரணமாக தூத்துக்குடியில் கொரானா தடுப்பூசியை அவர் முதலில் போட்டுக்கொண்டார். பின்னர், பல இடங்களில் கொரானா தடுப்பூசி மையங்கள் அமைக்க ஏற்பாடு செய்து கொரானா நோயை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை தொகுதி முழுவதும் செய்து வருகிறார்.
தொகுதியில் எந்தவொரு மக்கள் பிரச்சனை என்றாலும், அவரது கவனத்திற்கு மக்கள் எடுத்துச் சென்று மறுநிமிடமே அப்பிரச்சனையை விரைவாக தீர்க்க அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.
குறிப்பாக, சிவத்தையாபுரம் கிராமத்தில் மக்கள் நெருக்கமாக வசித்து வரும் பகுதியில் மின்கம்பம் சாய்ந்து பொதுமக்களுக்கு ஆபாயம் ஏற்படுத்தும் வகையில் அப்பகுதி மக்களை நீண்ட நாட்களாக அச்சத்தில் ஆழ்த்தியிருந்தது. இந்த நிலையில் ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினராக ஊர்வசி அமிர்தராஜ் பொறுப்பேற்ற ஒரு வாரத்தில் மின்வாரிய அதிகாரிகளை தொடர்பு கொண்டு, புதிய மின்கம்பம் அமைக்க ஏற்பாடு செய்தார். இதனையடுத்து, சிவத்தையாபுரம் பொதுமக்கள் ஊர்வசி அமிர்தராஜின் அதிரடி நடவடிக்கையை பாராட்டி வருகின்றனர்.
ஸ்ரீவைகுண்டம் தொகுதிக்குட்பட்ட ஸ்ரீவைகுண்டம் பேரூராட்சியில் கடந்த 3 ஆண்டுகளுக்கு மேலாக செயல் அலுவலர் பணியிடம் நிரப்பப்படாமல் மக்கள் பணிகள் தடைபட்டதாகவும், இதனால் பொதுமக்களுக்கு பயன்படக்கூடிய உட்கட்டமைப்பு பணிகள் குறிப்பிட்ட காலநிர்ணயத்திற்குள்; நடைபெறாமல் காலதாமதம் ஆகிவருவதாக ஸ்ரீவைகுண்டம் மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
செயல் அலுவலர் பொறுப்பை மற்ற பணிகளில் ஈடுபட்டுவரும் அதிகாரிகளிடம் கூடுதல் பொருப்பாகவே பல ஆண்டுகளாக கவனிக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வந்துள்ளது. இதனால், பேரூராட்சிக்குட்பட்ட வளர்ச்சி திட்டப்பணிகள் செயல்படாமல் தடைப்பட்டுள்ளது. இதற்கு உடனடியாக தீர்வு கான ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் ஊர்வசி அமிர்தராஜிடம் பொதுமக்கள் வேண்டுகோள் வைத்தனர்.

ஸ்ரீவைகுண்டம் பொதுமக்களின் வேண்டுகோளின் படி, இன்று (04.06.2021) தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தார். அதில், நீண்ட நாட்களாக நிரப்பபடாமல் இருக்கும் ஸ்ரீவைகுண்டம் பேரூராட்சி நிரந்தர செயல் அலுவலர் பணியிடத்தை உடனடியாக நிரப்புமாறு கோரிக்கை மனுவில் தெரிவித்திருந்தார்.
இவருடன் C.ஜேக்கப் சாயர்புரம் நகர தலைவர், மற்றும் T.ஜெயசீலன் தலைவர்: தூத்துக்குடி தெற்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ், எம்எல்ஏ உதவியாளர் சந்திரபோஸ், காங்கிரஸ் எடிசன் மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.
செய்தி தொகுப்பு: எம்.ஆத்தி முத்து

