• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

புத்தகம் படியுங்கள் உங்களது நேரத்தை நல்ல வழியில் செலவிடுங்கள் – தூத்துக்குடி எஸ்பி ஜெயக்குமார்அறிவுரை

policeseithitv by policeseithitv
June 2, 2021
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
புத்தகம் படியுங்கள் உங்களது நேரத்தை நல்ல வழியில் செலவிடுங்கள் – தூத்துக்குடி எஸ்பி ஜெயக்குமார்அறிவுரை
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தூத்துக்குடி 3வது மைல் ஆயுதப்படை காவலர் குடியிருப்பில் ஆயுதப்படை காவலர்களுக்கு ஆன்லைன் ரம்மி விளையாடுவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும், விளையாடுவதை தவிர்க்க வேண்டும் எனவும், கொரோனா வைரஸ் தாக்கத்திற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் நேற்று விழிப்புணர்வு ஏற்படுத்தி சிறப்புரையாற்றினார்.*

இதில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பேசுகையில் கொரோனா 2வது அலை வேகமாக பரவி வருவதால், அதன் தாக்கம் அதிகரித்து உயிரிழப்புகள் அதிகமாக உள்ளது. இதற்கு மாற்று வழி தடுப்பூசிதான், இந்த நேரத்தில் அனைவரும் தடுப்பூசி போடவேண்டும் என்பது அரசின் நோக்கம், தடுப்பூசி போட்டவர்களுக்கு அவ்வளவு எளிதாக கொரோனா தொற்று வருவதில்லை, அப்படியே தடுப்பூசி போட்டவர்களுக்கு வந்தால் கூட உயிரிழப்பு ஏற்படுவதில்லை. தூத்துக்குடி மாவட்டத்தில் காவல்துறையினர் அனைவரும் தடுப்பூசி போட்;டுக்கொள்ள வேண்டும். பணிக்கு செல்லும்போது முகக் கவசம் அணிந்து கொள்ள வேண்டும், 2 முககவசங்கள் அணிந்து கொள்வது சிறந்தது, அடிக்கடி கைகளை கிருமி நாசினி மற்றும் சோப்பு போட்டு சுத்தம் செய்து கொள்ள வேண்டும், சமூக இடைவெளி கடைபிடிக்க வேண்டும், மேலும் உங்கள் வீட்டில் உள்ளவர்களையும் தடுப்பூசி போட்டுக்கொள்ள அறிவுறுத்தவும். பணி முடிந்து வீட்டிற்கு செல்லும் போது குளித்துவிட வேண்டும் ஏனென்றால் உங்கள் மூலம் உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு தொற்று ஏற்பட அதிக வாய்ப்புள்ளது என்றும், இவற்றை சில காலங்கள் நாம் கடைபிடித்தால் தான் கொரோனா வைரஸை வெல்ல முடியும் என்றும், மேலும் இருசக்கர வாகனத்தில் செல்லும்போது கண்டிப்பாக தலைக்கவசம் அணிந்து செல்ல வேண்டும் என்றும், முக்கியமாக ஆன்லைன் ரம்மி விளையாடுவதை தவிர்க்க வேண்டும் ஆன்லைனில் பணத்தை இழந்து சில காவல்துறையினர் தற்கொலை செய்து கொள்வது நடந்து வருகிறது இதனால் ஆன்லைன் ரம்மி விளையாட வேண்டாம், தயவு செய்து நல்ல பழக்க வழக்கங்களை மேற்கொள்ளுங்கள், புத்தகம் படியுங்கள் உங்களது நேரத்தை நல்ல வழியில் செலவிடுங்கள் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் அறிவுரைகள் வழங்கினார்.

இதில் தூத்துக்குடி குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் திரு. கோபி, தூத்துக்குடி நகர காவல் துணை கண்காணிப்பாளர் திரு. கணேஷ், ஆயுதப்படை காவல் ஆய்வாளர் திரு. செந்தாமரைகண்ணன் உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் உடனிருந்தனர்.

Previous Post

தூத்துக்குடி மாவட்டம், கொப்பம்பட்டி பகுதியில் ஏழை, எளிய மக்கள் 120 பேருக்கு எஸ்பி ஜெயக்குமார் அரிசிப்பை, காய்கறிகள் வழங்கினார்

Next Post

ஏழை எளிய மக்களுக்கு உதவிக்கரம் நீட்டிய N3. முத்தால் பேட்டை, காவல் ஆய்வாளர். மல்லிகா! பொதுமக்கள் மனதார பாராட்டு

Next Post
ஏழை எளிய மக்களுக்கு உதவிக்கரம் நீட்டிய N3. முத்தால் பேட்டை, காவல் ஆய்வாளர். மல்லிகா! பொதுமக்கள் மனதார பாராட்டு

ஏழை எளிய மக்களுக்கு உதவிக்கரம் நீட்டிய N3. முத்தால் பேட்டை, காவல் ஆய்வாளர். மல்லிகா! பொதுமக்கள் மனதார பாராட்டு

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In