• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

தூத்துக்குடி மாவட்டம், கொப்பம்பட்டி பகுதியில் ஏழை, எளிய மக்கள் 120 பேருக்கு எஸ்பி ஜெயக்குமார் அரிசிப்பை, காய்கறிகள் வழங்கினார்

policeseithitv by policeseithitv
June 1, 2021
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
தூத்துக்குடி மாவட்டம், கொப்பம்பட்டி பகுதியில் ஏழை, எளிய மக்கள் 120 பேருக்கு எஸ்பி ஜெயக்குமார் அரிசிப்பை, காய்கறிகள் வழங்கினார்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தூத்துக்குடி மாவட்டம், கொப்பம்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தெற்கு செமப்புதூரில் சட்ட உரிமை நீதி பாதுகாப்பு சங்கம் மற்றும் ஊராட்சி மன்றம் சார்பாக மன நலக்காப்பகம், மாற்றுத்திறனாளிகள் மற்றும் ஏழை, எளிய மக்கள் 120 பேருக்கு ஊரடங்கு காலத்தை முன்னிட்டு அரிசிப்பை மற்றும் காய்கறிகள் அடங்கிய நிவாரண தொகுப்புகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் வழங்கினார்.*

*தூத்துக்குடி மாவட்டம், கொப்பம்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள தெற்கு செமப்புதூரில் ஊரடங்கு காலத்தை முன்னிட்டு சட்ட உரிமை நீதி பாதுகாப்பு சங்கம் மற்றும் செமப்புதூர் ஊராட்சி மன்றம் சார்பாக தெற்கு செமப்புதூரில் உள்ள ‘ஆக்டிவ் மைன்ட்ஸ்” எனப்படும் மன நலக் காப்பகத்தில் 42 பேருக்கு அரிசிப்பை மற்றும் காய்கறிகள் அடங்கிய நிவாரண தொகுப்புகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வழங்கினார்.*

*இதனை தொடர்ந்து அதே பகுதியில உள்ள அக்னி அம்மன் கோவில் மண்டபத்தில் வைத்து மாற்றுத்திறனாளிகள் மற்றும் ஏழை, எளிய மக்கள் மற்றும் தூய்மைப் பணியாளர்கள் 80 பேருக்கு அரிசிப்பை மற்றம் காய்கறிகள் அடங்கிய நிவாரண தொகுப்புகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் வழங்கினார்.*

*அப்போது அவர் பேசுகையில், பொதுமக்கள் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் கொரோனா தடுப்பூசி கட்டாயம் போட்டுக்கொள்ள வேண்டும், அதே போன்று மூக்கை நன்றாக மூடி முகக் கவசம் அணிய வேண்டும், அதிலும் 2 முகக்கவசம் அணிவது மிகவும் நல்லது, அடிக்கடி கைகளை சோப்பு மற்றும் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யவேண்டும், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்றும், அரசு அறிவித்துள்ள ஊரடங்கு உத்தரவை தவறாமல் கடைபிடித்து அரசுக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்து நம்மை நாமே காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் சிறப்புரையாற்றினார்.*

*இதற்கான ஏற்பாடுகளை சட்ட உரிமை நீதி பாதுகாப்பு சங்கத்தின் தேசிய செயலாளர் திரு. ராமமூர்த்தி மற்றும் செமப்புதூர் ஊராட்சி மன்றத் தலைவர் திருமதி. சுப்புலெட்சுமி முனியசாமி ஆகியோர் செய்திருந்தனர்.*

*இந்நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாவட்ட தலைமையிட காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் திரு. கார்த்திகேயன், கோவில்பட்டி துணை கண்காணிப்பாளர் திரு. கலைக்கதிரவன், கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய காவல் ஆய்வாளர் திரு. சபாபதி, கொப்பம்பட்டி காவல் நிலைய உதவி ஆய்வாளர்கள் திரு. ஆதிலிங்கம், திரு. செந்தில்வேல் முருகன், மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் திரு. பிரம்மநாயகம் உட்பட காவல்துறையினர் பலர் கலந்து கொண்டனர்.*

Previous Post

சென்னை கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவின்படி வாகன சோதனையில் தீவிரம் காட்டும் சென்னை உதவி ஆணையர் கோடிலிங்கம்

Next Post

புத்தகம் படியுங்கள் உங்களது நேரத்தை நல்ல வழியில் செலவிடுங்கள் – தூத்துக்குடி எஸ்பி ஜெயக்குமார்அறிவுரை

Next Post
புத்தகம் படியுங்கள் உங்களது நேரத்தை நல்ல வழியில் செலவிடுங்கள் – தூத்துக்குடி எஸ்பி ஜெயக்குமார்அறிவுரை

புத்தகம் படியுங்கள் உங்களது நேரத்தை நல்ல வழியில் செலவிடுங்கள் - தூத்துக்குடி எஸ்பி ஜெயக்குமார்அறிவுரை

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In