குலசேகரபட்டினம் அருகே ரூ.2.30 லட்சம் மதிப்புள்ள புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது : தூத்துக்குடி மாவட்டம், உடன்குடி அருகே பண்டாரஞ் செட்டிவிளை பகுதியில், குலசேகரபட்டினம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மங்கையர்கரசி தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, அவ்வழியே பைக்கில் வந்த ஒருவரை நிறுத்தி சோதனையிட்டனர்.
அப்போது அவர் வைத்திருந்த சாக்குப் பையில் 263கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பாக்கெட்டுகள் இருப்பது தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ.2 லட்சத்து 30ஆயிரம் ஆகும். இது தொடர்பாக போலீசார் வழக்குப் பதிந்து, மெஞ்ஞானபுரம் வடக்குத் தெருவைச் சேர்ந்த பெரியசாமி மகன் அழகுவேல் (55) என்பவரை கைது செய்து, புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.

