கொடைக்கானலில் களைகட்டும் கஞ்சா விளைச்சல் !!
டி.ஜி.பி. நேரடி கண்காணிப்பில் தனிப்படை அமைக்க வேண்டும் சமூக ஆர்வலர்கள் பலர் அரசுக்கு வேண்டுகோள் !
கொடைக்கானலில் கஞ்சா காளான், மற்றும் கஞ்சா பயிரிடுதல் கனஜோராக நடை பெறுகிறது. போதை பொருள் தடுப்பு பிரிவு என்ற ஒரு விங் தமிழக அரசு நிமித்து உள்ளது. அந்த காவலர்களின் பணி போதை பொருள் விற்பனை மற்றும் கஞ்சா பயிரிடுதல் போன்றவைகளை கட்டுப்படுத்துவது மட்டுமே இவர்களுக்கு பணி ஆனால் சட்ட ஒழுக்கு கவனிக்கும் போலீஸ் அணைத்து பணிகளையும் செய்கின்றனர்.
அப்படி இருந்தும் கொடைக்கானலில் துணிகரமாக கஞ்சா ஏக்கர் கணக்கில் பயிரிடுவதை போதை பொருள் தடுப்பு பிரிவு போலீஸ்சார் பிடிக்க முடியாத சூழ்நிலையில் கொடைக்கானல் சட்ட ஓழுங்கு டிஎஸ்பி ஆத்மநாதன், காவல் ஆய்வாளர் ராஜசேகர், உதவி ஆய்வாளர் காதர் மொய்தீன் ஆகியோர் எடுத்த அதிரடி நடவடிக்கை யால் கொடைக்கானல் மலை பகுதிகளில் ஏக்கர் கணக்கில் கஞ்சா
பயிர்யிடப்பட்டது கண்டு பிடிக்கபட்டு அது அழிக்கப்பட்டு உள்ளது.
குறிப்பிட தக்கது. கொடைக்கானல் தூண்பாறை சுற்றுலாதல வனப்பகுதிக்குள் ஏக்கர் கணக்கில் கஞ்சா பயிரிட்டருந்த நிலையில் 2 பேரை போலீஸ்சார் கைது செய்தனர்.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் உள்ள பிரபலமான சுற்றுலா தலமான தூண்பாறை பள்ளத்தாக்கின் பின்புறம் அடர்ந்த வனபகுதியில் சிலர் சந்தேகத்திற்கு இடம் அளிக்கும் வகையில் சென்று வருவதாக கொடைக்கானல் போலீஸ்சாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில்
டி.எஸ்.பி ஆத்ம நாதன் உத்தரவு பெயரில் ஆய்வாளர் தலைமையில் உதவி ஆய்வாளர் காதர் மைதீன் வன ஆய்வாளர் பழனி வேல் தலைமயில் போலீஸ் டீம் அந்த பகுதிகளில் அதிரடி சோதனை மேற்கொண்டனர். போலீஸ்சார் அதிர்ச்சி அடையும் வகையில் அங்குள்ள பாறைக்குள் முட்டை முட்டையாக
உளர்ந்த கஞ்சா செடி மற்றும் ஏக்கர் கணக்கில் கஞ்சா பயிரிடபட்டு கஞ்சா செடி பசுமையாக பல கோடி மதிப்பில் வளர்ந்து கிடந்ததை கண்டு கொடைக்கானல் போலீஸ்
அதிர்ந்தனர்.அங்கு பதுங்கியிருந்த
வில்பட்டியை சார்ந்த சக்தி வேல் என்பவரை போலீஸ் சார் கைது செய்து விசாரித்தனர். அவருடன் கும்பூரை சார்ந்த பிரசாந்த் மற்றும் உசிலம்பட்டி சேர்ந்த பாண்டி வீரமணி ஆகியோர் இந்த செயலில் ஈடுபட்டதாக காவல் துறை விசாரணையில் தெரிகிறது. பின்னர் கொடைக்கானல் சக்தி வேல், பிரசாந்த் ஆகியோரை போலீஸ்சார் கைது செய்தனர். அவர்கள் தெரிவித்த தகவல் படி உசிலம்பட்டி பாண்டி, வீரமணி ஆகியோரை பிடிக்க தனிப்படை அமைக்கபட்டது உலர்ந்த கஞ்சா மற்றும் ஏக்கர் கணக்கில் உள்ள கஞ்சா பயிர்களை கொடைக்கானல் போலீஸ் மற்றும் வனத்துறை தீயிட்டு அழித்தனர். இந்த சம்பவம் கொடைக்கானலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து சமூக ஆர்வலர்கள் தெரிவித்தது என்ன வென்றால் கொடைக்கானலில் இது போன்று பல ஏக்கர் கஞ்சா பயிர்யிடப்பட்டு வருவதும் பின்னர் இது அழிக்கப் படுவதும் வாடிக்கையாக இருந்து வருகிறது. இதனை முழுவதுமாக கொடைக்கானல் பகுதிகளில் இருந்து இதனை அழிக்க காவல் துறை இயக்குனர் டிஜிபி அவர்களின் நேரடி கண்காணிப்பில் தனிப்படை அமைத்து கொடைக்கானல் பகுதியில் உள்ள அணைத்து கஞ்சா பயிர்களையும் அழிக்க தனிப்படை அமைத்து களைகட்டிவரும் கஞ்சா காளான் மற்றும் கஞ்சா களை அடியோடு அழிக்க முன்வர வேண்டும் என கோரிக்கை எழுந்து வருகிறது. இந்த சம்பவம் அறிந்து போதை பொருள் தடுப்பு பிரிவு உயர் அதிகாரிகள் சென்னையில் இருந்து கொடைக்கானல் பகுதிகளில் உள்ள பள்ளதாக்கு பகுதியில் அதிரடி ஆய்வு பணி மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கொடைக்கானலில் இந்த கஞ்சா ஒழிப்பு அதிரடி பணிகளை மேற்கண்ட கொடைக்கானல்
டி.எஸ்.பி ஆத்ம நாதன், காவல் ஆய்வாளர் ராஜ சேகர் உதவி ஆய்வாளர் காதர் மொஹிதீன் வன ஆய்வாளர் பழனி மற்றும் தனிப்பிரிவு போலீஸ் ஆகியோருக்கு கொடைக்கானல் பொது மக்களிடம் இருந்து பாராட்டுக்கள் குவிகிறது. அதே சமயத்தில் திண்டுக்கல் மாவட்டம் போதை பொருள் தடுப்பு பிரிவு போலீஸ் கொடைக்கானல் மலை பகுதிகளில் ரோந்து பணிகளில் ஈடுபட வேண்டும் என கோரிக்கை எழுந்து உள்ளது.
செய்தி தொகுப்பு
கொடைக்கானல்
வி. ஆனந்த

