கொரோனா ஊரடங்கு உத்தரவால் வெளியூர் சென்று வர இ பாஸ் படிவத்தை ஆன்லைன்லில் பூர்த்தி செய்ய கொடைக்கானலில் ரூபாய் 500 வரை கொள்ளை வசூல்!! .மாவட்ட ஆட்சியர், கோட்டாட்சியர் ஆகியோரின் நடவடிக்கை பாயுமா?
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் 144 தடை உத்தரவு காரணமாக தவிர்க்க முடியாத சில காரணத்தால் வெளியூர்களுக்கு சென்று வர பொதுமக்கள் வசதிக்காக தமிழக அரசு இ பாஸ் சேவையை அறிமுகம் செய்துள்ளது. இந்த இ பாஸ் படிவத்தை ஆன்லைனில் கேட்கப்படும் கேள்விகளுக்கு காரணத்தோடு பதில் அளிக்கும் பச்சத்தில் அதன் உண்மை தன்மையின் அடிப்படையில் அவர்களுக்கு பாஸ் வழங்கப்பட்டு வருகிறது . இந்நிலையில் படிப்பறிவு இல்லாத மக்கள் ஆன்லைன் மூலம் இ பாஸ் படிவத்தை பூர்த்தி செய்ய தெரியாமல் தவித்து வருகின்றனர் , இதனை பயன்படுத்தி கொடைக்கானல் பேருந்து நிலையத்தில் உள்ள தனியார் கம்பியூட்டர் செண்டரில் ஆன்லைனில் ஒரு இ பாஸ் படிவத்தை பூர்த்தி செய்ய ரூபாய் 500 முதல் 1000 வரை கொள்ளை வசூல் செய்கின்றனர். பொது மக்களின் அவசர நிலையை கவனித்து கொண்டு அதற்கு ஏற்றார் போல் பெரும் தொகை வசூலில் ஈபடுவதாக பொது மக்கள் குற்றம் சாட்டுகிறார்கள் மேலும் கொடைக்கானலில் தற்போது இ – சேவை மையங்கள் திறக்காத நிலையில் இதனை பயன்படுத்தி இந்த தனியார் கம்ப்யூட்டர் சென்டரில் வசூல் வேட்டை நடத்தி வருகின்றனர் ,அப்பாவி மக்கள் வேறு வழியின்றி அவர்கள் கேட்கும் தொகையை கொடுத்து தனக்கு பாஸ் கிடைத்தால் போதும் என புலம்பிக்கொண்டே பணத்தை கொடுத்துவருகின்றனர். மேலும் இந்த செண்டரில் எதற்கு எடுத்தாலும் அதிக பணம் கேட்பதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர் ,எனவே மாவட்ட
ஆட்சியர், கோட்டாட் சியர் மற்றும் சம்பந்தபட்ட அதிகாரிகள் உடனே பொது மக்களிடம் அதிக படியான வசூல்கள் செய்யும் கொடைக்கானலில் உள்ள தனியார் கம்ப்யூட்டர் சென்டர் நிறுவனம் மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். மாவட்ட நிர்வாகத்தின் நடவடிக்கை என்ன என்பதை பொறுத்து யிருந்து பார்ப்போம்..
செய்தி தொகுப்பு
கொடைக்கானல் வி. ஆனந்த்

