சென்னை வேளச்சேரியில் போலீஸ் செய்தி டிவி சார்பில் ஏழை எளிய மக்கள் சுமார் 300 பேருக்கு நிவாரணம் வழங்கப்பட்டது
கொரோனா வைரஸ் உலகத்தையை புரட்டி போட்டுள்ள நிலையில் இந்தியா முழுவதும் 144 தடை உத்தரவு அமுலில் இருந்து வருகிறது இதனால் இயல்பு நிலை முற்றிலும் பாதிக்கபட்டு உள்ளது. அன்றாடம் வேலை பார்த்து பிழைப்பு நடத்தி வரும் பல ஏழை, எளிய மக்கள் மிகவும் வறுமையில் இருந்து வருகின்றனர்.
இதனை போக்கும் வகையில் நாடு முழுவதும் தொண்டு நிறுவனம், அறக்கட்டளை, சமூக அமைப்புகள் பல்வேறு அரசியல் கட்சியினர், தொழில் அதிபர்கள், மனித நேயமிக்க நல்ல உள்ளங்கள் ஆகியோர் நாட்டில் அணைத்து பகுதிகளிலும் உணவு பொருள்கள், காய்கறி, அரிசி, ஆகியவை வழங்கி வருகின்றனர். அந்த அடிப்படையில் சென்னை வேளச்சேரியில் போலீஸ் செய்தி டிவி குழுமம் சார்பில் வேளச்சேரி தலைமை நிருபர் வேளச்சேரி ர. சாகுல் அமீது மற்றும் K. அப்துல் காதர் ஆகியோர் ஏழை, எளிய மக்கள் சுமார் 300 பேருக்கு அரிசி மற்றும் எண்ணெய் பருப்பு மற்றும் சமையல் பொருள்கள் வழங்கினார்கள் இவர்களுடன் இஸ்லாமிய அமைப்புகளை
சேர்ந்தவர்கள் பலர் இணைந்து சாதி மதம் வேறுபாடு இன்றி அணைத்து தரப்பு மக்களுக்கும் நிவாரண உதவிகளை வழங்கினார்கள்,
ஊரடங்கு உத்தரவு நேரத்தில் தியாக உணர்வோடு மக்களுக்காக சேவை செய்யும் மனித நேயரும் போலீஸ் செய்தி டிவி வேளச்சேரி தலைமை நிருபர் வேளச்சேரி ர. சாகுல் அமீது, மற்றும் K. அப்துல் காதர் இவர்களுடன் இணைந்து நிவாரண பணிகளை மேற்கொண்ட இஸ்லாமிய அமைப்புகளை சேர்ந்தவர்கள் அனைவருக்கும் பொதுமக்கள் மனதார நன்றி மற்றும் வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டனர்
செய்தி தொகுப்பு
வேளச்சேரி ர. சாகுல் அமீது
தலைமை நிருபர் போலீஸ் செய்தி டிவி

