திண்டுக்கல் சரக டி ஐ ஜி முத்துசாமி,, தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாய் சரண் தேஜஸ், பெரியகுளம் துணை கண்காணிப்பாளர் முத்துக்குமார் ,ஆகிய மூவரும் பெரியகுளம் எண்டபுளி ஊராட்சியில் கொரோனா தொற்று அதிகம் பாதிக்கப்பட்ட பகுதியை ஆய்வு மேற்கொண்டனர்.
அதனடிப்படையில் எண்டபுளி ஊராட்சி ஊராட்சி தலைவர் சின்னப்பாண்டி அவர்களிடம் குரோனா தொற்று பாதிக்கப்பட்ட நபர்களை அவர்கள் நலமாக உள்ளார்களா என்று விசாரித்தார்… அவர் கூறுகையில் கொரோனா இரண்டாம் நிலை பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது….ஆதலால் அனைத்து பொதுமக்களும் வீட்டிலேயே தனித்து இருக்குமாறு பொதுமக்கள் சார்பில் அவர் கேட்டுக்கொண்டார்…

