கரூரின் வரலாற்றில் நிலைத்து நிற்ககூடிய பெயர் “பெத்தாட்சி ஞாபகார்த்த வளைவு”
கருவூருக்கு வெலிங்டன் பிரபு வருவதாக இருந்ததையொட்டி இக்கலையழகு மிளிரும் வளைவு நகர நிர்வாகத்தால் கட்டப்பட்டது
காலச் சூழல் வெலிங்டன் பிரபு வருகை ரத்து ஆனது அச் சூழலில் பொதுமக்கள் இவ்வளவிற்கு இதைக் கட்டிய ” பெத்தாட்சி “பெயரையே சூட்டினார்களாம்
யார் இந்த பெத்தாட்சி ?
இவருடைய அறங்கள்
125 ஆண்டு களுக்கு முன் கருவூர் வரலாற்றோடும் கலை, தமிழ், வளர்ச்சியிலும் பெரும் பங்காற்றியவர் “பெத்தாட்சி வள்ளல் “
ஆண்டிப்பட்டிக்கோட்டை ஜமீன் என்றழைக்கப்பட்டவர்
கருவூர் கோவில் விழாக்களை கிராமிய கலை நிகழ்ச்சிகளொடு கோலாகலமாக கொண்டாடியவர்
அன்றைய காலச் சூழலில் ஐந்து ரூபாய்க்கு குறைவான அனைத்து வகைகளையும் ரத்து செய்தவர்
தமிழில் சிறந்த மதிப்பெண் தமிழில் நல்ல கையெழுத்துகளை நகராட்சி ஆண்கள் பள்ளியில் பாராட்டி பரிசு வழங்கியவர்
சிதம்பரம் ஹாஸ்டல், உமையாள் பள்ளி, நேஷனல் ஹாஸ்டல் போன்ற அறங்களின் பிதாமகன்
கருவூரில் இருந்து ஆண்டிப்பட்டிக்கோட்டை செல்ல மழைக்கால அமராவதி ஆற்று நீர் பெருக்கம் தடையானதால் திட்டம் தீட்டி தானும் பெரும் பங்காற்றி கட்டிய பாலம் தான் பேச்சு வழக்கில் பெத்தாட்சி பாலம் ஆனது.
இதை அன்றய தெருக்கூத்துகளில் பபூன் நடிகர்கள் பாடும் போது :
அமராவதி ஆறு பாரு!
ஆற்று மேலே பாலம் பாரு!
பாலத்தை கட்டியதாரு?
பெத்தாட்சி செட்டியாரு!
எனப் பாடுவார்களாம்
இப்படி பல அறங்களுக்கு சொந்தக்காரரான பெத்தாட்சி பெயரில் நகராட்சி அரங்குகள் வளாகங்கள் இருந்தன இன்றைக்கு தரைமட்டமாக்கி கம்பீரமாக எழுப்பப்பட்டிருக்கும் புதிய நகராட்சி கட்டிடத்திற்கு
” பெத்தாட்சி “பெயர் சூட்டுவதே கருவூர் மக்களின் இன்றைய இன்றியமையாத கடமையாகும்
என கரூர் திருக்குறள் பேரவை செயலாளர் 
மேலை பழநியப்பன் தமிழ் நாடு அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
செய்தி தொகுப்பு:எம்.ஏ.ஸ்காட் தங்கவேல்

