தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பாக இன்று புதுக்கோட்டை காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர்கள், ஏழை எளிய மக்களுக்கு அரிசிப்பை மற்றும் காய்கறித் தொகுப்புகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் வழங்கினார்.
ஊரடங்கை முன்னிட்டு புதுக்கோட்டை காவல் நிலையத்தில் இன்று (28.05.2021) தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பாக புதுக்கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட புதுக்கோட்டை, கூட்டாம்புளி மற்றும் கோரம்பள்ளம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர்கள் மற்றும் ஏழை எளிய மக்கள் 100 பேருக்கு அரிசிப்பை மற்றும் காய்கறித் தொகுப்புகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் வழங்கினார்.
அப்போது அவர் பேசுகையில் கொரோனா வைரஸ் பரவல் 2வது அலை தீவிரமாக பரவி வருவதை தடுக்கும் பொருட்டு தமிழக அரசு முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்து அமலில் உள்ளது. இந்த காலம் மிகவும் சிரமமாக இருக்கும். இதனை பொறுத்துக் கொண்டு விதிமுறைகளை கடைபிடித்தால்தான் கொரோன வைரஸ் என்ற கொடிய நோயின் தாக்கத்திலிருந்து விடுபட்டு நம் உயிரைக் காப்பாற்ற முடியும். மேலும் ஆட்டோ ஒட்டுநர்களான நீங்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ளவேண்டும். 90 சதவீதம் இந்த வைரஸ் மூக்கு வழியாகதான் பரவி பாதிப்பை ஏற்படுத்துகிறது. அதனால் நீங்கள் எப்போதும் முகக் கவசம் அணிந்து கொள்ளுங்கள் அதை மூக்கு மற்றும் வாய் நன்கு மூடியவாறு அணிந்து கொள்ளுங்கள், அதிலும் 2 முகக்கவசங்கள் அணிந்தால் மிகவும் நல்லது. அடிக்கடி கைகளை கிருமி நாசினி மற்றும் சோப்பு போட்டு சுத்தம் செய்து கொள்ள வேண்டும், சமூக இடைவெளி கடைபிடிக்க வேண்டும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் சிறப்புரையாற்றினார்.
இதில் புதுக்கோட்டை காவல் ஆய்வாளர் திருமதி. மீனா, உதவி ஆய்வாளர் திரு. பாண்டியன் உட்பட காவல் நிலைய போலீசார் உடனிருந்தனர்.

