தூத்துக்குடியில் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மீக இயக்கம் சார்பில் ஏழை, எளிய மக்களுக்கு கரோனா அன்னதானம் வழங்கும் பணியை எஸ்பி ஜெயக்குமார் துவக்கி வைத்தார்.
தூத்துக்குடி மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கம் சார்பாக தூத்துக்குடியில் உணவின்றி கஷ்டப்படும் ஏழை எளிய மக்களுக்கு ஒரு நாளைக்கு 500 பேர் வரை அன்னதானம் ஏற்பாடு செய்துள்ளனர். மேற்படி அன்னதானத்தை இன்று (28.05.2021) தூத்துக்குடி அரசு மருத்துவமனை முன்பு ஏழை, எளிய மக்கள் 100 பேருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் மதிய உணவு பார்சல் வழங்கினார்.
இதுகுறித்து கரோனா ஊரடங்கு காலத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் ஒருவர் கூட உணவில்லாமல் கஷ்டப்படக்கூடாது என்பதுதான எங்களுடைய நோக்கம், ஆகவே இந்த கால கட்டத்தில் உதவி தேவைப்படுபவர்கள் தயங்காமல் மாவட்ட காவல் துறை அலுவலகத்தில் இதற்கென தனியாக 24 மணி நேரமும் இயங்கி வரும் சேவை மைய எண் 95141 44100 என்ற செல்போன் எண்ணிற்கு தொடர்பு கொண்டால் உங்களுக்கு உதவி செய்யத் தயாராக இருக்கிறோம் என்று மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
இதற்கான ஏற்பாடுகளை ஆன்மிக இயக்க மாவட்ட தலைவர் சக்தி.ஆர்.முருகன், பொறுப்பாளர்கள் கணேஷ், ஜோதி நெல்லைகுமார், முத்தையா, பொன் காசிராஜா, வேம்பு கிருஷ்ணன், பாக்கியம், மணிகண்டன், வட்டத் தலைவர் தினேஷ் ஆகியோர் செய்திருந்தனர். இதில் தூத்துக்குடி காவல் துணை கண்காணிப்பாளர் கணேஷ் உட்பட காவல்துறையினர் பலர் கலந்து கொண்டனர்.

