கரூர் மே 18
கரூர் மாவட்டத்தில் இன்று இரவு திடீரென மழை பெய்தது விவசாயிகள் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.குளித்தலை பகுதியில் வாழை மரங்கள் அடியோடு சாய்ந்தன. தமிழ்நாட்டிலேயே அக்னி வெயிலால் கரூர் மாவட்ட மக்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டு வந்தனர் இந்நிலையில் நேற்று இரவு 8 மணிக்கு தொடங்கிய மழை 45 மணி நிமிடம் மழை பெய்தது.
குளித்தலை பகுதியில் இடி காற்றுடன் கூடிய மழையால் நூற்றுக்கணக்கான ஏக்கர் வாழை சேதமடைந்தது திடீர் மழையாலும் திடீர் காற்றாலும் ஒருபுறம் மக்களுக்கு,விவசாயிகளுக்கு மகிழ்ச்சி என்றாலும் திடீர் காற்றால் வாழை மரங்கள் சாய்ந்ததால் விவசாயிகள் பெரிதும் பாதிப்படைந்தனர்.
ஒவ்வொரு முறையும் மழை வரும் போதும் சூறைக்காற்றும் கூடவே வருவதால் வாழை பயிரிடும் விவசாயிகள் பெரும் வேதனை அடைகின்றனர். ஆயிரக்கணக்கான வாழை மரங்கள் அடியோடு விழுந்து விடுவதால் விவசாயிகளுக்கு பெருத்த பாதிப்பு ஏற்படுகின்றது அரசு உடனடியாக அவர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்று அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
செய்தி தொகுப்பு: எம்.ஏ.ஸ்காட் தங்கவேல்

