நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் பொதுமக்களுக்கு உதவிடும் விதமாக ஆலங்குளம் காவல்துறையினர் மற்றும் மார்க்கெட் வியாபாரிகள் சங்கம் சார்பாக இணைந்து 500 பொதுமக்களுக்கு காய்கறிகள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுகுணாசிங் ஐ.பி.எஸ் அதனை வழங்கினார்.மேலும் இந்நிகழ்ச்சியில் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் பொன்னிவளவன் அவர்கள், சார்பு ஆய்வாளர் பரத்லிங்கம் மற்றும் ஆலங்குளம் மார்க்கெட் வியாபாரிகள் கலந்து கொண்டனர்.

