திருநெல்வேலி மாவட்ட காவல்துறையில் தனிப்பிரிவில் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வரும் சங்கர் அவர்கள் கொரோனா வைரஸ் நோய் தொற்றிற்கான தமிழக முதலமைச்சர் கொரோனா நிவாரண நிதிக்கு அவருடைய ஒரு மாத சம்பளத் தொகையான ₹60,000/- க்கு உண்டான சம்மத கடிதத்தையும், சேரன்மகாதேவி காவல் நிலையத்தில் பணிபுரிந்து வரும் முதல் நிலை காவலர் திரு சுதர்சன் அவர்கள் முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ₹10,000/-க்கான வரைவோலையை திருநெல்வேலி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் திரு.நெ.மணிவண்ணன் இ.கா.ப., அவர்களிடம் இன்று வழங்கினார்கள். உதவி ஆய்வாளர் மற்றும் காவலரின் இந்நற்செயலை திருநெல்வேலி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் ஐ.பி.எஸ் வெகுவாக பாராட்டினார்.
இந்நிகழ்ச்சியில் திருநெல்வேலி மாவட்ட கூடுதல் கண்காணிப்பாளர் சுப்பாராஜூ, திருநெல்வேலி ஊரக உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் அர்ச்சனா, தனிப் பிரிவு காவல் ஆய்வாளர் ராஜேஷ் உடன் இருந்தார்கள்.


