• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

காவல்துறையின் புதிய சேவை மையத்தை நாடிய 50 பேருக்கு மளிகைப்பொருட்களை மாவட்ட எஸ்பி எஸ்‌‌‌.ஜெயக்‌‌‌குமார்‌‌‌வழங்கினார்.

policeseithitv by policeseithitv
May 27, 2021
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
காவல்துறையின் புதிய சேவை மையத்தை நாடிய 50 பேருக்கு மளிகைப்பொருட்களை மாவட்ட எஸ்பி எஸ்‌‌‌.ஜெயக்‌‌‌குமார்‌‌‌வழங்கினார்.
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

ஏழை, எளிய மக்களின் பசியை போக்குவதற்காக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நேற்று ஆரம்பித்த காவல்துறையின் புதிய சேவை மையத்தை நாடிய 50 பேருக்கு அரிசி, எண்ணெய், பருப்பு உள்ளிட்ட மளிகைப்பொருட்கள் அடங்கிய நிவாரண தொகுப்புகளை மாவட்ட போலீஸ்‌‌‌ சூப்‌‌‌பிரண்‌‌‌டு எஸ்‌‌‌.ஜெயக்‌‌‌குமார்‌‌‌வழங்கினார்.

கொரோனா கால ஊரடங்கின்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள், முதியவர்கள், ஏழை எளிய மக்கள், உணவின்றி தவிப்பவர்கள் மற்றும் அத்தியாவசியத்தேவை வேண்டுபவர்களுக்கு வீடு தேடி வந்து உதவுவதற்கு 24 மணி நேரமும் இயங்கும் காவல்துறையின் புதிய சேவைக்கான தனிப்பிரிவு மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் திரு. இளங்கோவன் அவர்கள் தலைமையில் போலீசார் அடங்கிய தனிப்பிரிவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் நேற்று (26.05.2021) துவக்கி வைத்து, பொதுமக்கள், தங்கள் உதவிக்கு தொடர்பு கொள்வதற்கான செல்போன் எண். 95141 44100 எண்ணையும் அறிவித்திருந்தார்.

நேற்று அறிவித்தது முதல் தூத்துக்குடி மாவட்டத்தில் பல முதியவர்கள், ஏழை, எளிய மக்கள் மேற்படி எண்ணைத் தொடர்பு கொண்டு தங்களுக்குத் தேவையான உதவிகளை பெற்று வருகின்றனர். அதே போன்று இன்று தூத்துக்குடி அண்ணாநகரைச் சேர்ந்த தனிஸ்லாஸ் மனைவி ஜெயராணி என்பவர் தன்னுடைய வீட்டருகில் 16 குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் வறுமையில் கஷ்டப்படுவதாகவும், அவர்களுக்கு சமைத்து சாப்பிடுவதற்கு அத்தியவசியப்பொருட்கள் இல்லை என தெரிவித்திருந்தார். அதே போன்று தனிப்பட்ட முறையில் பல்வேறு நபர்கள் தெரிவித்திருந்தனர். உடனடியாக அவர்களின் தேவைகளையறிந்து, அவர்களுக்கு உடனடியாக வேண்டிய நிவாரணப் பொருட்கள் வழங்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் இளங்கோவன் அவர்களுக்கு உத்தரவிட்டார்.

உத்தரவின்பேரில் அவர்களுக்கு தேவையான அரிசி, எண்ணெய், பருப்பு, வத்தல் பொடி, புளி, மசாலா பொருட்கள் உள்ளிட்ட நிவாரண தொகுப்பை காவல்துறையின் சேவை மையத்தை நாடிய 1 மணி நேரத்தில் 50 பேருக்கு இன்று மாவட்ட போலீஸ்‌‌‌ சூப்‌‌‌பிரண்‌‌‌டு வழங்கினார்.

அப்போது அவர் கூறியதாவது தூத்துக்குடி மாவட்டத்தில் இந்த கொரோனா காலத்தில் யாரும் பசியில் கஷ்டப்பட்டார்கள் என்ற நிலை இருக்கக்கூடாது என்பதே தனது நோக்கம் என்றார். மேலும் உதவி தேவைப்படுபவர்கள் தயங்காமல் 95141 44100 என்ற எண்ணிற்கு தகவல் தெரிவிக்கலாம், அவர்களுக்கு தூத்துக்குடி மாவட்ட காவல்துறையினர் வீடு தேடி வந்து உதவி செய்வார்கள் என மாவட்‌‌‌ட போலீஸ்‌‌‌ சூப்‌‌‌பிரண்‌‌‌டு எஸ்‌‌‌.ஜெயக்‌‌‌குமார்‌‌‌ தெரிவத்துள்ளார்.

Previous Post

அரசு மருத்துவமனைகளில் பணிபுரிய ஒரு மாத காலம்பயிற்சி ஆர்வம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் – தூத்துக்குடி ஆட்சியர் செந்தில்ராஜ்

Next Post

கொரோனா நிவாரண நிதிக்கு காவலர்கள் திருநெல்வேலி மாவட்ட எஸ்பி மணிவண்‌‌‌ணனிடம் நிதி வழங்கினர்

Next Post
கொரோனா நிவாரண நிதிக்கு காவலர்கள் திருநெல்வேலி மாவட்ட எஸ்பி மணிவண்‌‌‌ணனிடம் நிதி வழங்கினர்

கொரோனா நிவாரண நிதிக்கு காவலர்கள் திருநெல்வேலி மாவட்ட எஸ்பி மணிவண்‌‌‌ணனிடம் நிதி வழங்கினர்

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In